“ரத்தக் கையெழுத்து”.. எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஆர்.பி. உதயகுமார்
மதுரை: பசும்பொனில் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய ஆர்.பி. உதயகுமார் ரத்தத்தில் கைரேகை பதித்தார். அவரைத் தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது ரத்தத்தில் கைரேகை பதித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

பசும்பொனில் நடக்கும் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய ஆர்.பி. உதயகுமார் ரத்தத்தில் கைரேகை பதித்தார். அவரைத் தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது ரத்தத்தில் கைரேகை பதித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி வறட்சியில் உள்ளது. 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார். டி.டி.வி தினகரனை பற்றி பேசத் தேவையில்லை. மீடியா வெளிச்சம் இல்லை என்றால், தமிழக மக்கள் மறந்து விடுவார்கள். டி.டி.வி.தினகரன் முதலில் மக்கள் பணி செய்யட்டும். டெல்டா மாவட்டங்களில் நெல் விதைகள் வீணாகப் போகிறது. அதைப் பற்றி எல்லாம் பேசாமல், போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது. முதலில் மக்கள் பணியை செய்ய சொல்லுங்கள். அதற்கு பிறகு மக்கள் தலைவர்களை பற்றி பேச சொல்லுங்கள்.
மாத்திரை எக்ஸ்பயரி டேட் முடிவதற்கு முன்பு சாப்பிட்டால் குணமாகும். அதையே காலம் தாழ்ந்து பின்பு சாப்பிட்டால் விஷம் ஆகிவிடும். எனவே எக்ஸ்பயரி டேட் முடிந்தவரைப் பற்றி பேச தேவையில்லை. டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழுகாது. அந்த அளவிற்கு விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். எல்லா நெல்லும் நாத்தாக மாறிவிட்டது. இதனை மறைத்து மாற்றும் முயற்சியில் உதயநிதி செயல்படுகிறார்" எனத் தெரிவித்தார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
"அதிமுக தொண்டர்களிடம் பிச்சை கேட்கிறீர்களா?" ஆதவ் அர்ஜுனா மீது ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு












Click it and Unblock the Notifications