Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவில் அவுட்சோர்சிங் முறை.. டிஎன்பிஎஸ்சி மூலம் பணியிடங்களை நிரப்புங்க.. ஹைகோர்ட்டில் மனு

Subscribe to Oneindia Tamil

மதுரை: பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனங்கள் குறித்த வழக்கு ஒன்று மதுரை ஹைகோர்ட்டில் தாக்கலாகியிருக்கிறது.. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அவுட்சோர்ஸிங் முறை என்றால் என்ன? நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு எத்தனையோ லட்சம் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்.. அதேபோல, டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகள் எழுதி அரசு வேலையில் சேரும் கனவுகளுடனும் பலரும் காத்திருக்கிறார்கள்.

registration department madurai high court

காலி பணியிடங்கள்: எனினும், பல்வேறு அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.. இது, பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

காரணம், இந்த அவுட் சோர்சிங் முறையில், 3ம் நிறுவனத்திற்குதான் லாபமாக இருக்கும்.. இந்த அவுட் சோர்சிங் முறையில் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அரசிடமிருந்து ஒரு தொகையையும் பெற்றுக் கொள்ளும்.. ஆனால், குறைவான தொகையை, தம்மிடம் வேலை செய்யும் நபர்களுக்கு தந்துவிட்டு, நிறுவனம் லாபத்தை சம்பாதித்துவிடும். எனவே, இந்த அவுட் சோர்சிங் முறைக்கு பரவலான அதிருப்தி தமிழக இளைஞர்களிடம் ஏற்கனவே இருந்து வருகிறது.

பதிவுத்துறை: இந்நிலையில், பத்திரப்பதிவு துறையில் அவுட்சோர்ஸிங் முறை குறித்து, மதுரை முகமது மஜீத் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.. அந்த மனுவில் உள்ளதாவது:

"பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அயல்பணி (அவுட்சோர்சிங்) முறையில் 'கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் '(டி.இ.ஓ.,) மற்றும் 'ஸ்டில் கேமரா ஆப்பரேட்டர்கள்' (எஸ்.சி.ஓ.,) பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு தனியார் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பொது வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களை பாதிக்கும்.

பணி நியமனங்கள்: இதற்கு முன் நகல் எழுதுபவர்கள் மற்றும் பிரிவு எழுத்தர்கள் இதுபோல் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பின் அவர்கள் வரன்முறைப்படுத்தப்பட்டனர். தற்போதுஅயல்பணி மூலம் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு நடைமுறை இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது. அரசுப் பணியில் நியமனங்கள் மேற்கொள்ள டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்துகிறது. அதனிடம் பத்திரப்பதிவுத்துறை ஆலோசனை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்யாதது சட்டப்படி ஏற்புடையதல்ல.

டி.இ.ஓ., மற்றும் எஸ்.சி.ஓ.,க்களுக்கு சிறப்பு தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் இல்லை. இவர்கள் ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை பதிவு செய்கின்றனர். தற்காலிக அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிவோரால் பல நடைமுறைச் சிரமங்கள் ஏற்படும். பொறுப்புணர்வு, சேவையில் தரம் இருக்காது. இதை செய்வதற்கு நிரந்தர பணியாளர்கள் தேவை.

மாவட்ட பதிவாளர்கள்: மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. விதிகள்படி டி.என்.பி.எஸ்.சி., மூலம் 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்', 'கேமரா ஆப்பரேட்டர்கள்' மற்றும் பிற பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.

மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப வேண்டும். அதைத் தவிர்த்து வேறு வகையில் பதிவுத்துறையில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணை: இந்த மனுவானது நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதிவுத்துறை தலைவர் அக்டோபர் 29ல், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+