சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. போலீசார் 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கைது செய்யப்பட்ட போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. போலீசார் தான், தந்தை மகன் இருவரையும் அடித்து கொலை செய்துள்ளதாகவும், தந்தை மகன் இருவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் இன்றூ வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரியான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் போலீசார் தாக்கியதில் கடுமையாக காயமடைந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடை திறக்கும் நேரம் தொடர்பான விவகாரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் அங்கு தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை ஆரம்பத்தில் மாநில போலீசார் விசாரித்தாலும், பின்னர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையின் அடிப்படையில், அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வழக்கின் அனைத்து தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துக்குமார் இந்த வழக்கை இன்று (திங்கட்கிழமை) தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். இன்று நீதிபதி முத்துக்குமார் தீர்ப்பு அளித்தார். அப்போது காவலர்கள் தாக்கியதால் தான் தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். போலீசார் அவர்களை அடித்து கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம், காவல் துறையின் செயல்பாடு மற்றும் மனித உரிமைகள் குறித்து நாடு முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. சமூக வலைதளங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த வழக்கில் விரைவான நீதி கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்ற முக்கிய வழக்காக மாறியது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் கைதான போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதால், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications