“முருகனுக்கு பவர் அதிகம்”.. முதல்வர் ஸ்டாலின் கார் டயர் வெடித்ததற்கு காரணம் சொன்ன செல்லூர் ராஜு!
மதுரை: "முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே, முதலமைச்சர் ஸ்டாலின் கார் டயர் பஞ்சராகி போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஆஸ்டின்பட்டி பகுதிக்கு அருகே சென்றபோது முதல்வர் பயணம் செய்த காரின் டயர் வெடித்தது. 100 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த நிலையில் டயர் வெடித்தது. இதையடுத்து, உடனடியாக முதல்வர் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார்.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, 60 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இல்லை. கூடுதல் சீட் தர வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு. தொண்டர்களின் கருத்தைதான் நான் பிரதிபலிக்கிறேன் என்கிறார். நாங்கள் ஏன் வேறு கட்சியுடன் கூட்டணி பேசக்கூடாது. எங்களை யார் தடுப்பதற்கு என்று காங்கிரஸ் கட்சியினரே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்களது கட்சித் தலைமை சொல்லாமலே அவர்கள் அப்படி பேசுகிறார்கள். திமுக தலைமையும், அதன் கூட்டணியும் வலுவிழந்துவிட்டதையே இது காட்டுகிறது. திமுக வலுவாக இருந்தால் இந்தமாதிரி யாராவது சொல்வார்களா? பிரவீன் சக்கரவர்த்தி கேள்விகளுக்கு ஏன் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்வில்லை. காங்கிரஸும், வேறு எந்த கட்சியும் வேண்டாம், தனித்து நிற்கப்போகிறோம் என்று திமுக தைரியமாக சொல்லத் தயாரா?
இது பொதுமக்கள் குமுறலையும் இந்த ஆட்சிக்கு எதிரான அலை எந்தளவுக்கு இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. நீங்கள் அடித்து வைத்திருக்கிற கொள்ளை பணத்தை எவ்வளவுதான் கொடுத்தாலும் சரி, மக்கள் மனம் மாறத் தயாரில்லை. 'ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல் தர போறாரு, ' என்ற பாட்டை இப்போது எந்த இடத்திலாவது கேட்க முடிகிறதா? அவர்களே அந்த பாட்டை போடுவதற்கு தர்மசங்கடப் படுகிறார்கள். உங்களுக்கு சவால் விடுகிறேன், ஆயிரம் பந்தயம் கட்டுவோம்.. அந்த பாடலை எந்த இடத்தில் திமுகவினர் போட்டார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
தமிழகத்தில் முதன்மையான பெரிய கட்சி எதுவென்றால் அதிமுக மட்டுமே. அதனால்தான், அதிமுக, தங்கள் கூட்டணியில் யார் வர வேண்டும் என்று முடிவெடுக்கிறது. இதில், அமித்ஷா சொல்வதை கேட்கிறார்கள், பாஜகவுக்கு அடிமை என்று சொல்வது, உங்கள் கற்பனை. எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு செல்வதால் நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது.
அவர் கூட்டணி பேச்சுவாரத்தைக்காக மட்டுமே செல்லவில்லை. தமிழக மக்கள் நலன் சார்ந்த பல கோரிக்கைகளுடன் அவர் டெல்லி சென்றுள்ளார். திமுகவின் இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை கொண்டு போய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுக்க போய் உள்ளார். அவரை சந்திக்க செல்வதில் என்ன தவறு?
கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி கொடுக்க அதிமுக வலியுறுத்தி வந்தது. தற்போது அதன்படி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நிறைவேற்றி கொடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கவும் எங்கள் பொதுச் செயலாளர் டெல்லி சென்றுள்ளார். இப்படி பல பணிகளுக்காக அவர் டெல்லி சென்றுள்ளார். அதற்குள் ஊடகவியலாளர்கள் பல முடிவெடுத்து கட்டுக் கதைகளாக அவிழ்த்துவிடுகிறீர்கள். உங்கள் கற்பனை குதிரைக்கு நாங்கள் ஆளில்லை.
கூட்டணி பலத்தில்தான் திமுகவே இருக்கிறது. ஜெயலலிதா போல ஆணித்தரமாக ஸ்டாலினால் முடிவெடுக்க முடியுமா?. தனியாக நின்று ஜெயிக்கிற அளவுக்கு தமிழகத்தில் திமுகவால் மறுமலர்ச்சியா ஏற்பட்டிருக்கிறது. பாலாறும், தேனாறும் பெருகி ஓடுவது போல் திமுகவின் விளம்பர ஆட்சிதான் நடக்கிறது. ஸ்டாலின் தன்னை பற்றி பெருமை பேச வைத்து ரசிக்கிறார். மக்கள் அவரைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என சொல்லிக்கொடுத்து பேச வைக்கக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் அருகில் முதல்வர் ஸ்டாலினின் கார் பஞ்சர் ஆகிவிட்டது, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, "முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த முருகப் பெருமானை ரொம்ப அதிகமாக விமர்சனம் செய்ததால்தான் ஒரு வேளை முருகப் பெருமானே முதல்வர் வந்த காரில் ஏதாவது செய்துவிட்டாரோ? செல்லூர் ராஜூ சொன்னார் என்று செய்தி போட்டுவிடப் போறீங்க.
பொதுவாக திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். மதிக்க வேண்டும். மூன்று முறை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு போய்விட்டது. அரசே இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்று நீதியரசர்களே கடுமையாக சாடியுள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications