நடப்பதை பாருங்க.. கற்பூரத்தைக் கொளுத்தி.. சாபம் விடும் பாணியில் ஆத்திரத்தோடு பேசிய ராம ரவிக்குமார்!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையேற போலீசார் அனுமதி மறுத்ததால், மனுதாரரான இந்து மக்கள் கட்சியினர் கலைந்து செல்லத் தொடங்கினர். மலைக்குச் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டு விழுந்து வணங்கி கலைந்து சென்றனர்.
நேற்று போலீசார் இவரை அனுமதிக்க வில்லை என்றதும், நடப்பதை பாருங்க.. முருகன் பார்த்துக்கொள்வான் இவர்களை என்று கூறி கற்பூரத்தைக் கொளுத்தி.. சாபம் விடும் பாணியில் இந்து முன்னணி ராம ரவிக்குமார் ஆத்திரத்தோடு பேசினார்.
சூடத்தை ஏற்றிவிட்டு பேசிய ராம ரவிக்குமார், இன்று எங்களுக்கு அனுமதி மறுத்தவர்கள்.. இங்கே அனுமதி தர முடியாது என்று சொன்னவர்கள்.. எங்களுக்கு சல்யூட் போட்டு அழைத்து செல்வார்கள். அதை நான் செய்து காட்டுவேன். அதுவரை நான் விட மாட்டேன். நான் ஒரு இந்து. நான் விட மாட்டேன். இல்லையென்றால் நான் வாழ்வதே வேஸ்ட். முருகா.. நாளைக்கு எங்களுக்கு தீர்வை கொடு.. முருகா.. முருகா.. அரோகரா.. அரோகரா
சூடத்தை ஏற்றிவிட்டு பேசிய ராம ரவிக்குமார்
கோர்ட் தீர்ப்பை மீறி செயல்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் தீர்ப்பின்படியே விளக்கு ஏற்ற கேட்டோம். ஆனால் அனுமதிக்காமல் தவிர்க்கிறார்கள். என்ன செயல் இது. எங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட செயல். எங்களையும், மத்திய பாதுகாப்பு படையினரையும் கைது செய்வேன் என்று சொல்கிறார்கள். இது திட்டமிட்டு நடக்கும் செயல்,

ஆனா இந்த மலையில மட்டும் தீபம் ஏற்றலனா என்ன நடக்கும்னே தெரியாது சொல்லிட்டேன். திட்டமிட்டு செய்லபடும் இந்த அரசாங்கத்தின் செயலை கண்டிக்கிறேன். நான் வயிறு எரிந்து சொல்கிறேன். நான் சத்தியமாக சொல்கிறேன். என் குலசாமி சார்பாக சொல்கிறேன். தீபம் மட்டும் ஏறவில்லை என்றால் என்ன நடக்கும் என்றே தெரியாது.
மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி எங்களை தடுக்கிறார்கள். வழக்கில் எந்த தீர்ப்பும் வரவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவிற்கு தடை இல்லை. ஆனால் தீர்ப்பை மீறி எங்களை தடுக்கின்றனர். இது என்ன நியாயம்? என்று சூடத்தை ஏற்றிவிட்டு ராம ரவிக்குமார் கோபமாக பேசினார்.
திருப்பரங்குன்றம் - என்ன நடந்தது?
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications