திணறிய மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை.. தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் கிளம்பிய தொண்டர்கள் அவதி
மதுரை: தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட தொண்டர்களால் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் முதல் அரசியல் பேச்சு, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க புதன்கிழமை முதலே தொண்டர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். வியாழன் காலையில் மதுரை தூத்துக்குடி சாலையில் எங்கு பார்த்தாலும் தவெகவினரின் வாகனங்களாக வந்து கொண்டிருந்தன.
#WATCH | Tamil Nadu | Slow vehicular movement seen on the Thoothukudi-Madurai highway. pic.twitter.com/2TOPzvm2lO
— ANI (@ANI) August 21, 2025
தவெக மாநாடு பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய நிலையில், 6 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில் விஜய் ராம்ப் வாக் முடிந்ததும் தொண்டர்கள் ஏராளமானோர் வெளியேறத் தொடங்கினர். விஜய் சுமார் 35 நிமிடங்கள் இந்த மாநாட்டில் உரையாற்றினார். விஜய் உரையாற்றிய பிறகு மாநாடும் முடிந்தது.
இதையடுத்து ஒரே நேரத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இதனால், மாநாடு நடைபெற்ற பாரபத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எலியார்பத்தி சாலையில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு வரை வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்று கொண்டிருக்கின்றன.
அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த தவெக தொண்டர்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது போக்குவரத்துக்கு தாமதம் ஏற்படுவதால், பல கி.மீ தூரம் நடந்தே சென்றனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி!











Click it and Unblock the Notifications