உதயநிதி ஏன் அப்படி சுற்றி கொண்டிருந்தார்? ஏன் லேட்டாகுது? எல்லாம் ஏமாற்றுவேலை.. போட்டு தாக்கிய வானதி

திமுகவை விமர்சித்து வானதி சீனிவாசன் மதுரையில் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை கையில் வைத்துக்கொண்டு சுற்றி கொண்டிருந்தார்.. இப்போது தேர்தலில் வெற்றி பெற்றதுமே, எய்ம்ஸ் கட்ட ஆரம்பிச்சிட்டாங்களா? ஏன் லேட்டாகுது? என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

2015-ல் இருந்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்ற பேச்சு உள்ளது.. தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தம் 4 மாநிலங்களில் இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது..

மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் தருவாயுக்கே வந்துவிட்டது.. ஆனால், நமக்கு இன்னும் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.

 மத்திய அரசு

மத்திய அரசு

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை.. அதற்கான அரசாணையும் வெளியிடவில்லை.. நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.. திட்ட அறிக்கையும் இன்னும் ரெடியாகவில்லை.. நிலமும் ஒப்படைக்கப்படவில்லை.. என இப்படி பல்வேறு புகார்களை எதிர்க்கட்சிகள் சொல்லி கொண்டே இருக்கின்றன... அதற்கேற்றபடி, எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடம் தேர்வில் அதிமுக- பாஜக இடையே நீடிக்கும் திரைமறைவு அரசியல் மோதலே இந்த தாமதத்துக்கு காரணம் என்று ஒரு பேச்சும் தமிழகத்தில் இருக்கவே செய்கிறது..

திமுக

திமுக

இப்படிப்பட்ட சூழலில் திமுகவும் எய்ம்ஸ் விவகாரத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் கையில் எடுத்து வருகிறது.. அதிலும் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் உதயநிதியின் ஒற்றை செங்கல் பிரச்சாரம் டெல்லி வரை அசைத்து பார்த்தது.. எங்கே சென்றாலும், கையில் ஒரு செங்கல்லை எடுத்து கொண்டு போனது மக்களிடையே ஈர்ப்பை அதிகரித்தது.. பிரச்சாரத்திற்கு தமிகழகம் வந்த அமித்ஷாவும், பாஜக தலைவர் நட்டாவும் உதயநிதியை விமர்சித்து சென்றதை மறுக்க முடியாது.. இறுதியில், உதயநிதியின் வெற்றிக்கு இந்த செங்கல் எய்ம்ஸ்ஸும் ஒரு காரணமாக அமைந்தது.

மாணிக் தாகூர்

மாணிக் தாகூர்

எனினும், இந்த விவகாரத்தை இன்றுவரை பாஜக மறக்கவில்லை என்றே தெரிகிறது.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரையில் ஒரு பேட்டி தந்திருக்கிறார்.. அப்போது உதயநிதியை விமர்சித்து சில வார்த்தைகளையும் உதிர்த்துள்ளார்.. வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்திருந்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.. அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களையும் சந்தித்தார்..

எய்ம்ஸ்

எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஜப்பான் பிரதமர் தான் நம்ப வேண்டும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதையெல்லாம் நாங்கள் முன்பு சொன்னபோது அவர்கள் காதில் விழவில்லையா? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால்தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இது தெரிந்திருந்தும் எய்ம்சை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை கையில் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றதுமே, இப்போ எய்ம்ஸ் கட்ட ஆரம்பிச்சிட்டாங்களா? ஏன் லேட்டாகுது? 7 மாத காலமாகியும் ஒற்றை செங்கலை எங்களை கையில் வைத்து ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? அப்போது விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் அரசியலுக்காக ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது" என்று வானதி பதிலளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+