விஜயகாந்த் ஒரு முறை முதல்வரானால் தமிழகம் வல்லரசாகும்.. விஜய பிரபாகரன் செம!
மதுரை: விஜயகாந்த் ஒரு முறை முதல்வரானால் தமிழகம் நிச்சயம் வல்லரசாகும் என அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் தேமுதிக சார்பில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஏழை எளியோருக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதலில் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு திரும்புங்கள் என தொண்டர்களுக்கு அறிவுரை கூறினார்.
இதையடுத்து விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அவர் பேசுகையில் தேமுதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பதவியில் அமருவார். எனவே தொண்டர்கள் இப்போதே விழிப்புணர்வுடன் பணியாற்றுங்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சில கட்சிகள் நம் மாநில மக்களை சாதி, மதத்தால் பிரிக்க முயற்சிக்கின்றன என்றார். இதையடுத்து விஜய பிரபாகரன் பேசினார்.
அப்போது விஜயகாந்த் ஒரே ஒரு முறை முதல்வரானால் தமிழகம் வல்லரசாகும். சிங்கம் போல் கெத்தாக மிக விரைவில் வந்து மக்களின் எண்ணங்களை அவர் நிறைவேற்றுவார்.
பிரேமலதா விஜயகாந்த் நிழல் சக்தி அல்ல; நிஜ சக்தி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கழகம் தேமுதிக; நல்ல தலைவனை, மிகச்சிறந்த தலைவனை 15 வருடங்களாக இழந்தது தமிழக மக்களே தவிர விஜயகாந்தும், தேமுதிகவும் அல்ல என்றார் விஜய பிரபாகரன்.












Click it and Unblock the Notifications