குழு வன்முறை.. அசாமில் 50 பேரால் அடித்துக்கொல்லப்பட்ட மாணவ அமைப்பின் தலைவர்.. அதிர்ச்சி சம்பவம்
கவுகாத்தி: அசாமில் அனைத்து அசாம் மாணவர் அமைப்பின் செயலாளர் கூட்டு வன்முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடஇந்திய மாநிலங்களில் குழு வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி வருகிறது. அதிலும் கடந்த சில வருடங்களில் குழு வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.
சாதாரண விபத்து, வாக்குவாதம் ஆகியவை கூட குழு வன்முறையில் முடியும் கொடுமை வடஇந்திய மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்க தொடங்கி உள்ளன.

மரணம்
இந்த நிலையில்தான் அசாமில் அனைத்து அசாம் மாணவர் அமைப்பின் செயலாளர் கூட்டு வன்முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல்நாள் இந்த சம்பவம் நடந்துள்ளது. கவுகாத்தியல் நிர்மல் சரியாலி என்ற பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர் ஒருவர் பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

உதவி செய்ய சென்றனர்
அந்த வழியாக பைக்கில் சென்ற அனைத்து அசாம் மாணவர் அமைப்பின் செயலாளர் அனிமேஷ் பஹுயன் அந்த குடிகாரருக்கு உதவி இருக்கிறார். அனிமேஷ் பஹுயனுடன் அவரின் நண்பர்கள் மிர்துஸ்மாண்டா, பிரனய் தத்தா ஆகியோரும் இருந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள் சிலர் அனிமேஷ் பஹுயன் மற்றும் அவரது நண்பர்கள்தான் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகம் அடைந்துள்ளனர்.

சந்தேகம்
இவர்கள்தான் அந்த குடிகாரரின் பைக்கில் மோதியதாக மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்திய அப்பகுதி மக்கள் அனிமேஷ் பஹுயன் மற்றும் அவரின் நண்பர்கள் விபத்து ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி அங்கேயே அவர்களை தாக்கி உள்ளனர். அனிமேஷ் பஹுயன் இந்த விபத்து ஏற்படுத்தவில்லை என்றாலும் அவரை போட்டு அப்பகுதி மக்கள் மோசமாக தாக்கி உள்ளனர்.

தாக்கினார்கள்
அவரை பேச கூட விடாமல் மோசமாக தாக்கி உள்ளனர். அவரை சுற்றி நின்ற 50க்கும் அதிகமான நபர்கள் மாறி மாறி மோசமாக அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மூன்று பேரையும் சுற்றி வளைத்து மாறி மாறி தாக்கியதில் மூன்று பேரும் சுய நினைவை இழந்துள்ளனர். செய்யாத குற்றத்திற்காக மாறி மாறி இப்படி மக்கள் தாக்கிய நிலையில் அனிமேஷ் பஹுயன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காயம்
இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு வந்தனர். ஆனால் போலீஸ் வந்த பின்பும் கூட அனிமேஷ் மற்றும் அவரது நண்பர்களை அங்கு இருந்த கும்பல் மிக மோசமாக தாக்கி உள்ளனர். தாக்கப்பட்டதாக அனிமேஷின் நண்பர்கள் மிர்துஸ்மாண்டா, பிரனய் தத்தா ஆகியோர் மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து அசாம் மாணவர் அமைப்பின் செயலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி இடையே மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications