பாலியல் தொல்லையை கண்டுக்காம "பேட்டி பச்சாவோ" முழக்கமா? பாஜகவை வாரிய நடிகை ஊர்மிளா
மும்பை: பாலிவுட் நடிகையும் சிவசேனா கட்சியை சேர்ந்தவருமான ஊர்மிளா மடோன்கர் பாலியல் தொல்லைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் என்பவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வீராங்கனைள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரிஜ் சிங் தங்களை பாலியல் தொல்லைக்குள்ளாக்கியதும் இல்லாமல் மனரீதியாக தொல்லை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பிரிஜ் சிங்கை கண்டித்து கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்னா போராட்டம் நடத்திநர்.

இதில் பிரிஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். 3 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் வீராங்கனைகளின் குற்றச்சாட்டை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தார்.
அது போல் விசாரணை முடியும் வரை தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டார். தன் மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் சிங் பதவியிலிருந்து விலகமாட்டேன் என கூறி வருகிறார். அது போல் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வீராங்கனைகளிடம் மேரிகோம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி அறிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை இதுவரை அந்த அமைச்சகம் வெளியிடவில்லை. இதனிடையே பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் கடந்த 23 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பிரிஜ் சிங் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி கடந்த 24 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, "பிரிஜ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்" என உறுதியளித்தார். இதையடுத்து பிரிஜ் சிங் மீது டெல்லி போலீஸார் நேற்றைய தினம் வழக்குப் பதிவு செய்தனர். எனினும் பிரிஜ் சிங்கின் பதவி பறிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீரர், வீராங்கைகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி போராட்டம் நடைபெறும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அது போல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேரில் சென்று வீராங்கனைகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்தார்.

இந்த நிலையில் வீராங்கனைகளுக்காக பாலிவுட் நடிகையும் சிவசேனை கட்சியின் நிர்வாகியுமான நடிகை ஊர்மிள ஆதரவு குரல் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் டெல்லியில் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வரும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தருமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரிடம் வலியுறுத்தினார். மேலும் நீதி வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக நேரிடும் என கூறியுள்ளார்.
பெண்களுடன் நிற்க முடியாவிட்டால் பெண் குழந்தைகளை காப்போம் என்ற முழக்கத்தை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என கூறியுள்ளார். மல்யுத்த வீராங்கனைகளின் குறைகளைக் கேட்டறியுமாறு மத்திய உள்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என ஊர்மிளா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை வினேஷ் போகட், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கேயே இவர்கள் மல்யுத்த பயிற்சிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications