மெயின் தலையே போயிருச்சு..மகாராஷ்டிராவுக்கே கருப்பு நாள்! விசாரணை நடத்தப்படும்.. ஏக்நாத் ஷிண்டே உறுதி
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் அஜித் பவார், இன்று காலை நிகழ்ந்த கோர விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த திடீர் சம்பவம் மகாராஷ்டிரா மட்டுமின்றி, நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சில அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அஜித் பவார் இன்று காலை சிறிய ரக தனியார் விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், பாராமதி பகுதி அருகே விமானம் தரையிறங்க முயன்ற போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில், அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணம் செய்த அவரது பாதுகாவலர்கள் இருவர் மற்றும் விமானிகள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஜித் பவார் மரணம்
67 வயதான அஜித் பவார், நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் ஆவார். அவர் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்துள்ளதுடன், நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். சரத் பவாரின் அரசியல் வாரிசு தொடர்பான முரண்பாட்டைத் தொடர்ந்து, அஜித் பவார் தனித்து அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அவரது தலைமையிலான பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
ஏக்நாத் ஷிண்டே
தற்போது மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசில், அஜித் பவாரின் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. அஜித் பவாரின் திடீர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவ சேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, "அஜித் பவார் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவரது மறைவு மகாராஷ்டிராவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக நாங்கள் இருவரும் ஒரே குழுவாக இணைந்து பணியாற்றினோம். இன்று அந்த குழுவின் ஒரு முக்கிய அங்கம் இல்லாமல் போய்விட்டது.
அஜித் பவார்
இந்த நாள் மகாராஷ்டிராவுக்கு ஒரு கருப்பு நாளாக அமைந்துள்ளது. அஜித் பவார் தெளிவாகவும், சரளமாகவும் பேசக்கூடியவர். கடின உழைப்பும் திறமையும் கொண்ட நேர்மையான தலைவர். 'பார்க்கலாம், யோசிக்கலாம்' போன்ற வார்த்தைகள் அவரது அகராதியில் இல்லை. எதைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தால், அதை உடனடியாக நிறைவேற்றுவார். தவறான திட்டம் என நினைத்தால், அதற்கு 'இல்லை' என்று சொல்ல அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை நாங்கள் ஒரே குழுவாக தொடங்கினோம். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
மரணம் குறித்து விசாரணை
நேரத்துக்கு மிகுந்த மதிப்பு கொடுக்கும் மனிதர் அவர். மக்களைச் சந்திப்பதற்காக காலை 6 மணிக்கே நேரம் ஒதுக்கிய சம்பவங்களும் உண்டு. விடாமுயற்சியும் துணிச்சலும் ஒழுக்கமும் கொண்ட தலைவரை நாம் இழந்துவிட்டோம். இந்த விமான விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார். மேலும், இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு தைரியமும் மனவலிமையும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications