“என் உள்ளாடையை பார்க்க விரும்பினாரு..” இயக்குநர் மீது நடிகை பிரியங்கா சோப்ரா பரபர புகார் - யார் அது?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான பிரயங்கா சோப்ரா, இயக்குநர் ஒருவர் தன்னுடைய உள்ளாடையை பார்க்க விரும்பியது தர்ம சங்கடத்தை கொடுத்ததாக பேசி இருப்பது இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் நடித்த அவர், உலக அழகி பட்டத்தையும் வென்று இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது பல்வேறு திரைப்படங்கள், இணைய தொடர்களில் நடித்து வரும் அவர், தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். அப்போது ஒரு இயக்குநர் தன்னுடைய உள்ளாடையை பார்க்க விரும்புவதாக தெரிவித்தது கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறி இருக்கிறார்.
அவர் பேசுகையில், "அது 2002 அல்லது 2003 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் ஒரு படத்தில் அண்டர்கவர் அதிகாரியாக நடித்தேன். அப்போது ஒரு ஆணை கவர வேண்டும். அண்டர்கவர் அதிகாரியாக பெண்கள் நடிக்கும்போதெல்லாம் இதைதானே செய்ய சொல்வார்கள்? நான் அந்த ஆணை கவரும்போது ஒரு ஆடையை அந்த நேரத்தில் அவிழ்க்க வேண்டும்.
ஆனால், நான் உள்ளாடையை லேசாக மறைத்துக்கொண்டேன். அப்போது படத்தின் இயக்குநர், 'நான் உங்கள் உள்ளாடையை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதற்காக ஒருவர் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கிறார்?' என்று கேட்டார். அவர் நேரடியாக என்னிடம் அதை சொல்லவில்லை. என் முன்பாகவே அங்கிருந்த ஒரு மேக்கப் கலைஞரிடம் அவ்வாறு சொன்னார்.
அது ஒரு மனிதாபிமானம் அற்ற தருணம். அப்போது நான் வெளியில் ஒன்றுமில்லை என்ற உணர்வை எனக்கு தந்தது. எனது கலை முக்கியமில்லை, நான் நடிப்பது முக்கியமில்லை. என்று தோன்றியது. 2 நாட்கள் கழித்து நான் அந்த படத்தில் இருந்தே வெளியேறிவிட்டேன். தினமும் அவரது முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை.

பாலிவுட்டில் சிலர் என்னை ஒரு மூலைக்கு தள்ளிய பிறகு நான் பாலிவுட்டில் இருந்தே சில நாட்கள் விலகி இருந்தேன். அங்கு நிலவிய அரசியல் எனக்கு சோர்வை தந்தது. எனக்கு அந்த விளையாட்டை ஆடத் தெரியாது. சிலர் என்னை நடிக்கவிடாமல் தடுத்தார்கள். இதுவரை இந்த தகவலை நான் சொல்லியது இல்லை. ஆனால், இப்போது சொல்கிறேன்." என்றார்.
அதே நேரம் பிரியங்கா சோப்ராவிடம் அவ்வாறு நடந்துகொண்ட இயக்குநர் யார்? எந்த படத்தில் இருந்து அவர் பாதியில் வெளியேறினார் என்ற தகவலை அவர் வெளிப்படுத்தவில்லை. பிரியங்கா சோப்ராவின் இந்த பேட்டி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ரசிகர்கள் பலரும் அந்த இயக்குநரின் பெயரை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications