100 கோடி டார்கெட்.. ரஷ்யா, சீனா அல்ல நாமதான் கிங்.. கொரோனா வேக்சினுக்காக இந்தியாவை நாடும் வல்லரசுகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: கொரோனாவிற்கு தடுப்பு மருந்து உருவாக்கப்பட்ட பின் மொத்தமாக 100 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தனது பிரம்மாண்ட திட்டத்தை அறிவித்துள்ளது.

கொரோனாவிற்கு எப்போது தடுப்பூசி உருவாக்கப்படும் என்று உலக நாடுகள் மிக தீவிரமாக எதிர்பார்க்க தொடங்கி உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் மிக முக்கியமான கட்டத்தில் மனித குலம் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இதில் நல்ல செய்தி கிடைக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

120க்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனையை செய்து வருகிறது. இதில் 24 மருந்துகள் தற்போது மனித சோதனை கட்டத்தில் இருக்கிறது.

ஆக்ஸ்போர்ட் நிறுவனம்

ஆக்ஸ்போர்ட் நிறுவனம்

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் முடிவு

ஒப்பந்தம் முடிவு

இந்த ஆஸ்டெராசெனெகா நிறுவனம் தனது மருந்து உற்பத்திக்காக இந்தியாவை நாடி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடன் இணைந்து ஆஸ்டெராசெனெகா இந்த மருந்து உற்பத்தியை செய்கிறது. உலகிலேயே மருந்து உற்பத்தியை அதிகமாக செய்யும் நிறுவனம்தான் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. இதனால்தான் அந்த நிறுவனத்தை உற்பத்திக்காக ஆஸ்டெராசெனெகா நாடியுள்ளது. இதற்காக சீரம் நிறுவனம் பெரிய திட்டம் ஒன்றையும் வகுத்து இருக்கிறது .

திட்டம் என்ன

திட்டம் என்ன

இது தொடர்பாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நாங்கள் ஆக்ஸ்போர்ட் மருந்தை சோதனை செய்ய இருக்கிறோம். மக்கள் மீது இந்த மருந்தை சோதனை செய்ய உள்ளோம். இந்த ஆக்ஸ்போர்ட் மருந்து அக்டோபர் - நவம்பர் மாதத்திற்குள் மருந்து மொத்தமாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று நினைக்கிறோம்.

எவ்வளவு

எவ்வளவு

அக்டோபர் மாதத்தில் இருந்து நாங்கள் மாதம் மாதம் 7 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இருக்கிறோம். ஒரு மாதத்திற்கு 7 கோடி மருந்துகளை உற்பத்தி செய்வோம். வருட இறுதியில் மொத்த உற்பத்தியை 10 கோடியாக மாததிற்கு அதிகப்படுத்துவோம். இந்தியாவும் , உலக சுகாதார மையமும் அனுமதி கொடுத்தவுடன் கற்பனை செய்து பார்க்க முடியாத வேகத்தில் இந்த பணிகளை செய்ய இருக்கிறோம்.

திட்டம் என்ன

திட்டம் என்ன

எங்களின் இலக்கு 100 கோடி உற்பத்தி. அடுத்த வருடம் பாதிக்கும் 100 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இருக்கிறோம். இதை நாங்கள் விற்பனை செய்ய மாட்டோம். அரசிடம் கொடுத்து விற்பனை செய்ய வைக்க போகிறோம். இந்த உற்பத்தியை பெருக்குவதற்கு தற்போது தீவிரமாக தயாராகி வருகிறோம், என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.

எத்தனை நாடுகள்

எத்தனை நாடுகள்

இந்தியாவில் இப்படி உற்பத்தி செய்யப்பட உள்ள 100 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பும், முக்கியத்துவமும் அதிகரிக்க போகிறது. கொரோனா தடுப்பு மருந்து மூலம் உலக நாடுகளை, சீனா அல்ல ரஷ்யாதான் கட்டுப்டுத்த போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஏனென்றால் இரண்டு நாடுகளும் கொரோனா வேக்சின் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகிறது.

Recommended Video

    Corona vaccine - ஐ Russia உருவாக்கியது எப்படி? உருவான மோதல்
    வேக்சின் தீவிரம்

    வேக்சின் தீவிரம்

    ஒரு பக்கம் சீனா கொரோனா வேக்சின் சோதனையின் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் ரஷ்யா மருந்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர போகிறோம் என்று அறிவித்துள்ளது. இவர்கள் தங்கள் மருந்து உற்பத்தியை சொந்த நாட்டிற்கு உள்ளேயே செய்ய இருக்கிறார்கள். இதனால் உலக நாடுகள் இவர்களை நம்பித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் உண்மை

    ஆனால் உண்மை

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவின் ஒரு நிறுவனம் ஆக்ஸ்போர்ட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் 100 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய போகிறது. அதோடு உலகம் முழுக்க 60 நாடுகளுக்கு இந்தியாதான் தடுப்பு மருந்தை அனுப்ப போகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய உலகின் வல்லரசு நாடுகளுக்கு கூட இந்தியாதான் மருந்து ஏற்றுமதியை செய்ய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+