அதுக்குன்னு இப்படியா? கரண்ட் பில் ரூ.570.. நேரா இ/பி ஆபீசுக்கு போன நபர்.. நிஜமாவே போயிட்டியா ரிங்கு
மும்பை : அபிஜித் என்ற இளைஞருக்கு, கரண்ட் பில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை வந்துள்ளது.. இதுவே மொத்த பிரச்சனைக்கும் காரணமாகிவிட்டது.
கோடை காலம் துவங்கிவிட்டதால், கடும் வெப்பமும், புழுக்கமும் அதிகரித்து வருகிறது.. எனவே, வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது... AC இரவெல்லாம் ஓடுவதால் கரண்ட் பில்லும் அதிகமாகி கொண்டிருக்கிறது. வெயிலை சமாளிக்க முடியாமல், இன்னொரு பக்கம் கரண்ட் பில்லையும் சமாளிக்க முடியாமல், பொதுமக்கள் விழிபிதுங்கி உள்ளார்கள்..

அதுவும் வடமாநிலங்களில், பலருக்கும், வழக்கத்தைவிட கரண்ட் பில் அதிகமாக வருகிறதாம்.. அதனால், சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவே மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார்களை தந்து கொண்டிருக்கிறார்கள்..
மின்கட்டணம்: அப்படித்தான், மகாராஷ்டிர மாநிலம், புனேவில் ஒருவருக்கு கரண்ட் பில் இந்த மாசம் எகிறிவிட்டது.. பாராமதி மோர்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர் அபிஜித்.. 26 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.
எப்போதும் இல்லாத அளவுக்கு கரண்ட் பில் இந்த மாசம் 570 ரூபாய் வந்திருந்தது... இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அபிஜித், பாரமதி தாலுகா, மோர்கான் பகுதியில் மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட் (எம்எஸ்இடிசிஎல்) அலுவலகத்தில் புகார் தந்தார்.. ஆனால், ஆனால், அவரது புகாரின்பேரில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
ஆத்திரம்: இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த அபிஜித், நேரடியாகவே இதைபற்றி விசாரிப்பதற்காக, மின்வாரிய அலுவலகத்திற்கு போனார்.. அங்கு மின்சார வாரிய பெண் டெக்னீசியன், ரிங்கு பன்சோடே என்பவர் மட்டும் டியூட்டியில் இருந்தார். அவரிடம் அபிஜித், இந்த மாதம் எனக்கு ஏன் அதிகமாக பில் வந்திருக்கிறது? அந்த அளவுக்கு கரண்ட் பில் வர வாய்ப்பே இல்லையே? என்று கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.
அதாவது, வெறும் 63 யூனிட் மட்டும்தான் பயன்படுத்தியிருப்பதால், மின்கட்டணம் ரூ.570 எப்படி வரும்? என்று கேட்டுள்ளார்.. இதனால், மின் ஊழியர் ரிங்குவுக்கும், அபிஜித்துக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அபிஜித், கையோடு கொண்டு சென்றிருந்த அரிவாளால், அந்த பெண் ஊழியரை வெட்டிவிட்டார். அதுவும் 16 முறை சரமாரியாக வெட்டிவிட்டார்.
ஊழியர்கள்: இதில் ரிங்கு ரத்தவெள்ளத்திலேயே மயங்கி விழுந்தார்... இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.. ரிங்குவை, உடனடியாக புனே மருத்துவமனையில் சேர்த்தனர்..
ரொம்ப சீரியஸான நிலைமையில்தான் சிகிச்சை ஆரம்பமாகியிருக்கிறது.. அதனால், போலீசாருக்கும் தகவல் பறந்தது.. விஷயத்தை கேள்விப்பட்டு, மருத்துவமனைக்கே போலீசார் விரைந்து வந்து, ரிங்குவிடம் வாக்குமூலம் பெற்றனர்..
அப்போதுதான், அபிஜித் தன்னை தாக்கிய விபரங்களையெல்லாம் ரிங்கு சொன்னார்.. இதன் அடிப்படையில் அபிஜித் கைது செய்யப்பட்டார்.. ஆனால், அதற்குள் சிகிச்சை பலனளிக்காமல் ரிங்கு பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதனையடுத்து அபிஜித் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிதாபம்: ரிங்கு தவிர வேறு ஊழியர்களும் அன்றைய தினம் பணியில் இருந்துள்ளனர்.. ஆனால், அபிஜித் சென்ற நேரம் ரிங்கு மட்டுமே சீட்டில் உட்கார்ந்திருந்தார்.. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் 10 நாள் லீவு முடிந்துவிட்டு, சம்பவம் நடந்த அன்னைக்குதான் மறுபடியும் டியூட்டிக்கு வந்தாராம் ரிங்கு..
கரண்ட் பில் ஜாஸ்தியானதால், ஒரு கொலை வரை சென்றுள்ளது, இப்போதுதான் முதல்முறை என்கிறார்கள் பொதுமக்கள்.. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை இந்த கோடை வெயிலில் கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications