இந்தியா கூட்டணி ஜெயித்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் வருவார்கள்.. பிரதமர் மோடி பேச்சை கவனிச்சீங்களா?
மும்பை: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பிரதமர் என 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்கள் வருவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதையடுத்து 2வது கட்டமாக நேற்று (ஏப்ரல் 26) கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி வரை இன்னும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பிரச்சாரம்: இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சி கூட்டணியால் மூன்று இலக்க எண்ணிக்கையையோ அல்லது அரசாங்கத்தை அமைக்கும் வாசலை கூட தொட முடியாது, ஆனால் வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமராக இருக்க வேண்டும் என்று புதிய ஃபார்முலாவுடன் உள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள்: மேலும் பேசிய அவர், "ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களை கொண்டு வர நினைக்கிறார்கள். இந்த நாடு இதை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. கர்நாடகாவில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வர் பதவியை சுழற்சி முறையில் மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளன.
ஓபிசியினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை உள்ளே கொண்டு வந்துள்ள கர்நாடக மாடலை நாடு முழுவதும் விரிவுபடுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது. ஒரு பிரிவினரை திருப்தி படுத்துவதற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் காங்கிரஸ் தரம் தாழ்ந்து வருகிறது.
காங்கிரஸை தாக்கிய மோடி: அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி, தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டுப் பலன்களை பறிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பையும் நிராகரித்தது.
காங்கிரஸ் கட்சி உங்கள் சொத்துக்களை பறித்து நாட்டின் வளங்களில் முதல் உரிமை என்று அவர்கள் கூறியவர்களுக்கு விநியோகிக்க விரும்புகிறது. பரம்பரை வரியை விதித்து மக்களின் உரிமையைப் பறிக்க காங்கிரஸ் நினைத்தது. அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு சிறு வாய்ப்புக் கூட கிடைக்கக்கூடாது.
பாஜக 2 - காங்கிரஸ் 0: கோலாப்பூர் ஒரு கால்பந்து விளையாட்டு மையமாக அறியப்படுகிறது. மக்களவைத் தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது கட்டத்தில் இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று வாக்காளர்கள் அத்தகைய 'கோலை' அடிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த கட்டங்களில், இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி முன்பு, தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறி வந்தார். சமீப நாட்களாக, பிரதமர் 400+ முழக்கத்தை கைவிட்டுள்ளார். அதேபோல, இதுவரை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் என பேச்சுக்கு கூட சொல்லாத பிரதமர் மோடி, இன்று "இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை கொண்டு வருவார்கள்" எனப் பேசி இருக்கிறார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications