ஐபிஎல் 2023 - நீங்கள் அறிந்திராத விஷயங்கள்..இம்பேக்ட் விதி குறித்து விளக்கம்..மிஸ் பண்ணக்கூடாத ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த ஐபிஎல் தொடரில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடுகிறது.

இதனால் இந்த போட்டியை காண ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.வழக்கமாக நடைபெறும் ஐபிஎல் தொடரை விட இந்த சீசன் கொஞ்சம் வித்தியாசமானது.

அது ஏன் என்று தற்போது பார்க்கலாம்.முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை ஐபிஎல் இம்பேக்ட் விதி கடைபிடிக்கப்படுகிறது. அது என்ன இன்பாக்ட் விதி என்று தற்போது பார்க்கலாம் .

எப்படி பயன்படுத்தலாம்?

எப்படி பயன்படுத்தலாம்?

ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர் தான் பங்கேற்கலாம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் இம்பேக்ட் பிளேயர் என்ற விதியில் இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் வெளிநாட்டு வீரர்களில் நான்கு பேருக்கு பதில் 3 அல்லது இரண்டு பேர் தான் ப்ளேயிங் லெவனனில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றால் அப்போது இம்பேக்ட் பிளேயரை வெளிநாட்டு வீரராக பயன்படுத்த முடியும்.

மாறும் போட்டி

மாறும் போட்டி

இதன் மூலம் ஒவ்வொரு அணியும் சிறப்பான யுக்திகளை மாற்றி அமைத்து பிளேயிங் லெவனை தேர்வு செய்ய முடியும். இதேபோன்று பேட்டிங் செய்யும் அணியில் ஒரு வீரர் ஆட்டம் இழந்து விட்டால் அவருக்கு பதிலாக இன்னொரு வீரரை தேர்வு செய்து அவரை பேட்டிங்கிற்கும் பயன்படுத்தலாம். இல்லை பவுலர் ஆகவும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் ஆட்டம் இழந்து விட்டால் அவருக்கு பதில் ராஜவர்தனே ஹங்கர்கேக்கரை பயன்படுத்தலாம்.

 பந்துவீச்சிலும் இம்பேக்ட் விதி

பந்துவீச்சிலும் இம்பேக்ட் விதி

இம்பேக்ட் விதியில் பயன்படுத்தி ஹங்கர்கேக்கரை பேட்டிங் செய்யுவும் வைக்கலாம். பவுலிங் செய்யவும் வைக்கலாம். ஆனால் ருத்ராஜ் கெய்க்வாட், அதன் பிறகு அன்றைய ஆட்டத்தில் எதிலும் பங்கேற்க கூடாது. இதேபோன்று எடுத்துக்காட்டாக தீபக்சாகர் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அவரை நீக்கிவிட்டு இன்பாக்ட் பிளேயராக டெத் ஓவரில் சிறப்பாக வீசக்கூடிய ஏதேனும் ஒரு பந்துவீச்சாளரை சிஎஸ்கே பயன்படுத்தலாம்.

டிஆர்எஸ் விதி மாற்றம்

டிஆர்எஸ் விதி மாற்றம்

இந்த புதிய விதி ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியது என்பதால் இது எப்படி செயல்பட போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.மேலும் ஐபிஎல் தொடரில் இம்முறை ஓயிடு அல்லது நோபாலை எதிர்த்து ரிவியூ செய்யும் முறையும் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் நடுவர்களின் தவறு தடுக்கப்படும். இந்த இரண்டு விதிகள் காரணமாக ஐபிஎல் 16வது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+