கொரோனா பரவல்... மும்பை முதலிடம்... ஒரே நாளில் 8938 பேர் பாதிப்பு
மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்றே ஒரே நாளில் 1,26,789 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 685 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திர பிரதேசத்தில் லக்னோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், லக்னோ மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 16 ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் தினமும் 6000 க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் தடுப்பு மருந்துகள் அதிகம் தேவைப்படுவதால், கூடுதலாக மருந்துகளை அனுப்ப மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தடுப்பு மருந்து செலுத்தும் பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் நேற்று மீண்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 8938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையை தொடர்ந்து டெல்லியில் ஒரே நாளில் 7437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் டெல்லியில் உயிரிழந்துள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications