ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி போடும் ஷூ விலை ரூ.2 லட்சமாம்..!?
மும்பை: போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே அணிந்துள்ள ஷூ ரூ.2லட்சம் மதிப்புடையது என்றும் விலை உயர்ந்த ஆடைகளை வாங்க அவருக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது எனவும் மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கேள்விகளால் வெளுத்து வாங்கியுள்ளார்.
அரசு ஊழியம் பார்க்கும் ஒரு நேர்மையான அதிகாரியால் எப்படி இது போன்ற ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிக்க முடியும் என நவாப் மாலிக் வினவியுள்ளார்.

இதனிடையே நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டையும், விமர்சனத்தையும் உறுதியாக மறுத்துள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே, நவாப் மாலிக் அறிவற்றவர் என்றும் அதனால் தான் இப்படி வதந்தி பரப்பி வருவதாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து 20 நாட்களாக சிறையில் இருக்க வைத்தவர் தான் இந்த சமீர் வாங்கடே. போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக பணியாற்றும் இவர் ஏற்கனவே தம் மீதான குற்றச்சாட்டு ஒன்றில் துறை ரீதியான உள் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவரது சகோதரி யாஸ்மின் வழக்கறிஞராக உள்ளதால் அவர் மூலம் இந்த வழக்கை நடத்த போதைப் பொருள் வியாபாரி ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அதன் அடிப்படையில் சமீர் வாங்கடேவின் சகோதரி யாஸ்மின் வாங்கடே தனது விசிட்டிங் கார்டு மற்றும் இருப்பிட முகவரி உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே அந்த வாட்ஸ் அப் சாட் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப்மாலிக், போதைப் பொருள் வியாபாரியுடன் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் சகோதரிக்கு என்ன பேச்சு வேண்டியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரில் சமீர் வாங்கடே தனது வழக்கறிஞர் சகோதரியுடன் இணைந்து தனி ஆவர்த்தணம் செய்து வருவதாகவும் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு சமீர் வாங்கடேவுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது எனத் தெரியவில்லை எனவும் சாடியிருக்கிறார். மொத்தத்தில் தாம் ஒரு நேர்மையான அதிகாரி என்று வெளிவேஷம் போடுகிறார் என்கிற ரீதியில் சமீரை விமர்சித்திருந்தார் நவாப் மாலிக்.
இதனிடையே போதைப் பொருள் மாஃபியாக்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பதற்கான பணிகளை பின்னிருந்து இயக்கி வருவதாகவும், தன்னை போதைப் பொருள் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு கேட்டதை தொடர்ந்து இது போன்ற வழக்குகளை ஏற்று தாம் நடத்துவதில்ல எனக் கூறி தனது சகோதரி விலகிவிட்டதாகவும் சமீர் வாங்கடே விளக்கம் அளித்திருக்கிறார். நவாப் மாலிகிற்கு அறிவு கிடையாததால் தான் இப்படி பேசி வருவதாக பதில் கொடுத்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நம்பர் 1 குற்றவாளியாக பிரகடனம் செய்து அவரை ஜாமினில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் சமீர் வாங்கடே என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications