Mayday கால் கூட இல்லை.. அஜித் பவார் விமான விபத்துக்கு என்ன காரணம்! டிசிஜிஏ சொன்ன மிக முக்கிய தகவல்
மும்பை: இன்று காலை பாராமதி விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விமான விபத்தில் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே விமான விபத்து தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை டிசிஜிஏ வெளியிட்டுள்ளது. இதில் விபத்திற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை என்றாலும் சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
மகாராஷ்டிராவில் இன்று நாட்டையே உலுக்கும் விமான விபத்து நடந்தது. அம்மாநிலத் துணை முதல்வரும் என்சிபி கட்சித் தலைவருமான அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இந்த மோசமான விபத்தில் அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவைத் தாண்டி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேடே கால் இல்லை
இதற்கிடையே பாராமதி விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது விமானிகள் தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டதாக டிசிஜிஏ தெரிவித்துள்ளது. முதல் முறை தரையிறங்கும் முயற்சியில் ஓடுதளம் சரியாகத் தெரியாததால், விமானம் மீண்டும் ஒருமுறை 'கோ அராவுண்ட்' (go-around) செய்து, இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சி நடந்துள்ளது.. விபத்துக்கு முன் விமானிகளால் எந்தவிதமான "மேடே" (Mayday) அவசர அழைப்பும் விடுக்கப்படவில்லை.
பாராமதி விமானம் ரொம்பவே சின்ன ஒரு விமான நிலையம். அங்கு இரவு நேரம் அல்லது போதிய தெரிவுநிலை (visiblity) இல்லாத நேரத்தில் தரையிறங்க ஏதுவான வசதிகள், அதாவது ஓடுபாதையில் விளக்குகள் கூட இல்லை. இதன் காரணமாகவே விமானத்தின் ஓடுபாதையை பைலட்டால் சரியாகக் கண்டறிய முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் தான் அவர் அவசரக் காலத்தில் அழைக்கும் மேடே கால் கூட விடுவிக்கவில்லை.
மேடே கால் என்றால் என்ன
பொதுவாக விமானத்தில் எதாவது கோளாறு இருந்தால் பைலட் மேடே கால் விடுப்பார். அதாவது விமானத்தில் ஏதோ சிக்கல் இருக்கிறது.. தொழில்நுட்ப அல்லது எலக்டிரிக்கல் கோளாறு இருக்கிறது என்பதை விமானக் கட்டுப்பாட்டு மையத்திற்கு உணர்த்தும் வகையில் மேடே கால் விடுப்பார். இதுபோல மேடே கால் வந்தால் உடனடியாக அந்த விமானத்திற்குக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உதவுவார்கள். ஆனால், அஜித் பவார் சென்ற விமானத்தில் இருந்து கடைசி வரை எந்தவொரு மேடே காலும் வரவில்லையாம்.
என்ன அர்த்தம்
எனவே, விமானத்தில் கோளாறு எதுவும் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. அங்குக் காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஓடுபாதையைப் பார்க்க முடியாததே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த டிஜிசிஏ அதிகாரிகள், அங்கு டேட்டாவை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிளாக் பாக்ஸையும் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
விமான விபத்து
டெல்லியைச் சேர்ந்த வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லியர்ஜெட் 45 வணிக ஜெட் விமானம் தான் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமானம் காலை மும்பையில் இருந்து பாராமதிக்குச் சென்றுள்ளது.. பாராமதி விமான நிலையத்தில் முதலில் காலை 08:44 மணியளவில் தரையிறங்கும் முயற்சியில் இவ்விபத்து ஏற்பட்டது. இதில் மராட்டியத் துணை முதல்வர் அஜித் பவார், இரண்டு விமானிகள், மூன்று பயணிகள் என விமானத்தில் இருந்த மொத்தம் ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்று டிசிஜிஏ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications