Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 மாத நோட்டம்.. பாகிஸ்தான் துப்பாக்கிகள்.. 70 பேர் கொண்ட நெட்வொர்க்! சல்மான் கானை கொல்ல பகீர் பிளான்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அவர்களில் 5 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவி மும்பை போலீசார் தாக்கல் செய்த இந்த குற்ற பத்திரிக்கையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யக் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த முயற்சிகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து இப்போது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

salman khan cinema

அதில் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய சிலர் சல்மான் கானை கொலை செய்யச் சதி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் இல்லத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பல ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார் பலரைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து இப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சல்மான் கானை படுகொலை செய்ய பிஷ்னோய் கேங் ரூ. 25 லட்சம் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை இதற்கான திட்டத்தைப் போட்டுள்ளனர்.

இந்த கேங் பாகிஸ்தானில் உள்ள டீலரிடம் இருந்து ஏகே-47, ஏகே-92, எம்16 துப்பாக்கிகள்.. துருக்கியில் இருந்து ஜிகானா பிஸ்டல் என சல்மான் கானை கொல்ல அதிநவீனத் துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர். இந்த ரக துப்பாக்கிகள் தான் கடந்த 2022இல் அரங்கேறிய பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களைப் பெறுவது மட்டுமின்றி விரிவான பிளானை அவர்கள் தயார் செய்துள்ளனர்.சல்மான் கானை கொல்ல விரிவான திட்டம் போட்டுள்ளனர். சல்மான் கான் எப்போது எங்கே இருக்கிறார் என்பதைக் கண்காணிக்க மட்டும் சுமார் 60 முதல் 70 நபர்கள் கொண்ட நெட்வொர்க் ஈடுபட்டு இருக்கிறது. மும்பையில் உள்ள அவரது வீடு, பன்வெல் பண்ணை வீடு மற்றும் கோரேகான் பிலிம் சிட்டி எனப் பல இடங்களில் சல்மான் கான் நடமாட்டத்தைக் கண்காணித்துள்ளனர்.

மேலும், சல்மான் கானை கொல்ல மைனர் சிறுவர்களைப் பயன்படுத்தவும் இந்த கேங் திட்டமிட்டிருந்தது. இதற்கான ஆட்களையும் அவர்கள் இறுதி செய்துவிட்டார்களாம். அந்த மைனர் சிறார்கள் தங்கல் உத்தரவுக்காகவே காத்திருந்துள்ளனர். வட அமெரிக்காவில் இருந்து இயங்குவதாகக் கூறப்படும் கோல்டி ப்ரார் மற்றும் அன்மோல் பிஷ்னோய் ஆகிரோய் உத்தரவிட்டால் கொலை செய்ய இந்த மைனர் சிறுவர்கள் ரெடியாக இருந்துள்ளனர். ஆனால், தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டதால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் இல்லத்தின் முன் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், அதற்கு மறுநாளே மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சல்மான் கானை நேரில் சந்தித்து அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலேயே இவை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+