மகாராஷ்டிரா அமைச்சர் மீது போலீஸ் குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் மோதிய சிவசேனா-பாஜக!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மீது காவல்துறை அதிகாரி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

இது தொடர்பாக பாஜக எம்பிக்கள், சிவசேனா எம்பிக்கள் மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் வசைபாடினார்கள்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் புதிய பரபரப்பு

மகாராஷ்டிராவில் புதிய பரபரப்பு

தற்போது இந்த கூட்டணியை ஆட்டம் காணும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மீது காவல்துறை அதிகாரி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு இந்த கூட்டணியை ஆட்டம் காண வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

 உள்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு

உள்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு

இந்த விவகாரம் தொடர்பாக இந்த வழக்கில் மும்பையை சேர்ந்த காவல்துறை அதிகாரி சச்சின் வஜேவை ஏன்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றப்பட்டார். இந்த பரம்வீர் சிங்தான், தேசிய வாத காங்கிரசை சேர்ந்த உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.

 உத்தவ் தாக்கரே ஒரு வார்த்தை பேசவில்லை

உத்தவ் தாக்கரே ஒரு வார்த்தை பேசவில்லை

இந்த விவகாரத்தால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி வரும் நிலையில் இதுபற்றி உரிய விசாரணை நடத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது. மக்களவையில் இந்த சம்பவத்தை கையில் எடுத்த பாஜக, மகாராஷ்டிரா அரசு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. நாடு முழுவதும் அமைச்சர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

வெங்கையா நாயுடு அனுமதி மறுப்பு

வெங்கையா நாயுடு அனுமதி மறுப்பு

மராட்டிய அரசும், புகாருக்கு உள்ளான உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக்கும் பதவி விலக வேண்டும். மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக பா.ஜ.க எம்.பி.க்கள் பூனம் மகாஜன், ராகேஷ்சிங் உள்ளிட்டோர் குரல் எழுப்பினார்கள். மகாராஷ்டிரா அரசை களங்ப்படுத்த பாஜக சதி செய்வதாக சிவசேனா எம்.பி. வினாயக் ராவத் தெரிவித்தார். இதே போல் மாநிலங்களவையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த பிரச்சினையை எழுப்புமாறு பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். ஆனால் யாரும் நோட்டீஸ் கொடுக்காததால் இதனை எழுப்ப அனுமதிக்க முடியாது என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+