என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து! அதை வச்சி காசு பார்த்தாரே.. கணவர் மீது ராக்கி சாவந்த் கண்ணீர் புகார்
தன்னை கணவர் அடில் கான் துரானி நிர்வாணமாக வீடியோ எடுத்து விற்பனை செய்ததாக ராக்கி சாவந்த் குற்றச்சாட்டு
மும்பை: என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை விற்பனை செய்து அதன் மூலம் காசு சம்பாதித்துள்ளார் என கணவர் அடில் கான் துரானி மீது கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளார்.
பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அது போல் இவர் பிக்பாஸ் மராத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த திருமணத்தை முறித்துக் கொண்டார். இதை அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

ராக்கி சாவந்த்
இந்த நிலையில் ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அடில் கான் துரானி என்ற தன்னை விட வயதில் குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 30 வயதாகிறது. அதாவது இருவருக்கும் 11 ஆண்டுகள் வித்தியாசம். இவர்களது திருமணத்தை 8 மாதங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

திருமணத்தை மறுத்த அடில்
ஆனாலும் இதை அடில் மறுத்தார். மேலும் தனது கணவருடன் இருந்து தன்னை பிரிக்க பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதையடுத்து அந்த விவகாரத்தில் வேறு நடிகையிடம் தகராறு செய்ததாக ராக்கி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதனிடையே ராக்கியின் தாய் புற்றுநோயுடன் போராடி வந்தார். அவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து அவர் மீது புகார்களை கூறி வந்தார்.

வரதட்சிணை குற்றச்சாட்டு
இந்த நிலையில் அடில் கான் வரதட்சிணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் ராக்கி சாவந்த் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீஸார், அடில் கானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தனது புகாரில் ராக்கி சாவந்த் கூறியிருப்பதாவது: அடில் கானுடன் எனக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்து பிசினஸ் அக்கவுண்டை ஓபன் செய்தோம். என்னிடம் சொல்லிவிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கார் வாங்குவதற்காக அடில் ரூ 1.5 கோடி பணத்தை அந்த அக்கவுண்ட்டில் இருந்து எடுத்தார்.

வங்கிக் கணக்கில் பணம்
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக அடில் உறுதி அளித்ததால் , அடில் பணம் எடுப்பதை தடுக்கவில்லை. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் நன்றாக இருந்த அவர், போக போக என்னை துன்புறுத்த ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு முறையும் என்னை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வந்தார். எனது தாய் புற்றுநோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தேன். நான் சம்பாதித்த பணம் எல்லாம் அடிலிடம்தான் இருக்கிறது. ஆனால் அவர் நான் இல்லாத போது என் தாயின் சிகிச்சைக்காக பணத்தை செலுத்தவில்லை. இதனால் எனது தாயை அவர் கொன்றுவிட்டார்.

கொலை மிரட்டல்
எனக்கு அவ்வப்போது அடில் கொலை மிரட்டல் விடுக்கிறார். என்னை இயற்கைக்கு மாறாக உறவு வைத்துக் கொள்ள துன்புறுத்துகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எங்கள் வீட்டில் கப்போர்டில் இருந்த ரூ 5 லட்சம் பணம் மாயமாகியிருந்தது. மேலும் எனது தாயின் ரூ 2.5 லட்சம் மதிப்பிலான நகைகளையும் காணவில்லை. அப்போதுதான் நான் இல்லாத போது என் வீட்டிற்கு அடில் கான் வந்ததை எனது வீட்டு காவலாளி என்னிடம் சொன்னார் என தன் புகாரில் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

நிர்வாண வீடியோ
தற்போது சிறையில் இருக்கும் அடில் மீது ராக்கி சாவந்த் மேலும் ஒரு பகீர் குற்றச்சாட்டை அளித்துள்ளார். இதுதொடர்பாக ராக்கி சாவந்த் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்த அடில் கான், அதை நிறைய பேருக்கு விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளார். இந்த வழக்கு சைபர் கிரைமில் உள்ளது. எனக்கு வரும் ஓடிபிக்களை எடுத்து என் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இவ்வாறு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராக்கி சாவந்த் தினந்தோறும் ஒரு புகாரை கணவர் மீது கூறி வருகிறார். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications