ரத்தன் டாடா மரணத்துக்கு என்ன காரணம்? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? வெளியான தகவல்
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல்நலம் மோசமான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இந்நிலையில் தான் ரத்தன் டாடா ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது? என்பது பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக இருந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.

ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இரவில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் ஆங்கில நாளிதழில் உறுதி செய்தனர். இருப்பினும் அவர்கள் யார்? ரத்தன் டாடாவுக்கு எந்த மாதிரியான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது? எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது? என்பது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் இரவு 11.40 மணியளவில் ரத்தன் டாடா காலமானார். மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது. ரத்தன் டாடா எப்படி இறந்தார்? அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது? என்பது பற்றி மும்பை தனியார் மருத்துவமனை சார்பில் உடனடியாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இத்தகைய சூழலில் தான் ரத்தன் டாடாவின் மரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ரத்தன் டாடாவுக்கு 86 வயது ஆன நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக எதிர்க்கொள்ளும் உடல் உபாதைகளை சந்தித்துள்ளார். இதையடுத்து தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவர் ஐசியூவில் சேர்க்கப்பட்டு அங்கு உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இதுதவிர ரத்தன் டாடாவுக்கு வேறு எந்த உடல்நல பிரச்சனைகளும் இல்லை என்றே சொல்லப்படுகிறது.
முன்னதாக நேற்று முன்தினமும் ரத்தன் டாடா உடல்நலம் குறித்த ஒரு தகவல் வெளியானது. அதாவது ரத்தன் டாடாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை ரத்தன் டாடா முற்றிலுமாக மறுத்தார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில், ‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் இன்று காலமாகி உள்ளார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications