சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை- ஆர்டிஐ தகவல்
மும்பை: நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் ஏதும் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுவிட்டதாக பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது.
1993-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 257 பேர் மரணமடைந்தனர். 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு தடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுத தடை சட்டத்தின்படி6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
தடா சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு, மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளாகத் தண்டனைக் குறைப்பு பெற்ற சஞ்சய் தத், மேலும் தண்டனைக் கழிவு வழங்கப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி அன்று மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் உள்ள எரவாடா சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையில், அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications