Saif Ali Khan: சைஃப் அலிகானை கத்தியால் குத்தியது இவரா? வெளியான போட்டோ - படிக்கட்டில் இறங்குவதை பாருங்க
மும்பை: மும்பையில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக உள்ளார். இந்த வழக்கில் இன்னும் யாரும் கைது செய்யப்படாத நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக சந்தேகப்படும் நபரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த போட்டோ தற்போது பரவி வருகிறது.
மும்பை பாந்த்ரா பகுதியில் நடிகர் சைஃப் அலி கான் வசித்து வருகிறார். இந்த பகுதியில் பல பிரபலங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று அதிகாலையில் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த நபர் கத்தியால் குத்திவிட்டு ஓடியுள்ளார்.

இதில் சைஃப் அலிகானின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. மொத்தம் 6 முறை அவரை மர்மநபர் கத்தியால் குத்தி உள்ளார். குறிப்பாக முதுகு பகுதியில் சைஃப் அலிகானுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை, முதுகு, கழுத்து என்று பல இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. கை, கழுத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது சைஃப் அலிகான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டார். அவர் தற்போது நலமாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சைஃப் அலிகான் வசிக்கும் பாந்த்ரா என்பது பல பிரபலங்கள் வசிக்கும் இடமாகும். அதிக கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள் உள்ள இந்த இடத்தில் மர்மநபர் எப்படி நுழைந்து சைஃப் அலிகானை கத்தியால் குத்தினார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே தான் சைஃப் அலிகானை வீடு மற்றும் அதன் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி சிசிடிவி கேமராவில் சந்தேகப்படும் படியாக 2 நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. இதனால் அவர்கள் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதில் ஒருவரின் வீடியோ மற்றும் போட்டோ வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள அந்த வீடியோவில் குற்றவாளியாக கருதப்படும் நபர் படிக்கட்டில் சாதாரணமாக நடந்து செல்கிறார். அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரை கைது செய்யும் பணியை தனிப்படை போலீசார் தொடங்கி உள்ளனர். இன்னொருவரின் போட்டோ இன்னும் வெளியாகவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications