மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது அவசரத்தில் உருவான கிச்சடி கூட்டணி அரசு அல்ல.. மீண்டும் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னவீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: இது கிச்சடி கூட்டணி அரசு அல்ல என மீண்டும் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த கூட்டணி உடைந்தது. பின்னர் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க பல்வேறு காய்களை நகர்த்தியது சிவசேனா.

    இந்த நிலையில் நேற்று மூன்று கட்சிகளுக்கும் இடையே இறுதி முடிவு எட்டப்பட்டுவிட்டது. இதையடுத்து என்சிபி தலைவர் சரத் பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமையும் என்றார்.

    27 வயதில் மேயர்.. 44 வயதில் முதல்வர்.. இளம் வயதில் சாதனைகளை புரிந்த தேவேந்திர பட்னவீஸ்.. யார் இவர்? 27 வயதில் மேயர்.. 44 வயதில் முதல்வர்.. இளம் வயதில் சாதனைகளை புரிந்த தேவேந்திர பட்னவீஸ்.. யார் இவர்?

    ஆட்சி அமைக்க

    ஆட்சி அமைக்க

    எனவே இன்றைய தினம் மூன்று கட்சிகளும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்திருந்தன. திடீர் திருப்பமாக என்சிபியுடன் கூட்டணி அமைத்த பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.

    துணை முதல்வராக

    துணை முதல்வராக

    இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னவீஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

    குடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவர்

    அப்போது அவர் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் நிலையான அரசு அமைய பாஜகவுடன் கூட்டணி அமைத்த அஜித் பவாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்வது நல்லதல்ல.

    கிச்சடி கூட்டணி அல்ல

    கிச்சடி கூட்டணி அல்ல

    எனவே இருவரும் இணைந்து நிலையான அரசை கொடுப்போம். இது கிச்சடி கூட்டணி அரசு அல்ல. நீண்ட நாட்களாக நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. இன்னும் சில தலைவர்களும் எங்களுடன் வந்தார்கள். பின்னர் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம் என்றார் தேவேந்திர பட்னவீஸ்.

    English summary
    Maharashtra Chief Minister, Devendra Fadnavis says that he would like to express my gratitude to NCP's Ajit Pawar ji, he took this decision to give a stable government to Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X