மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டவ்தே புயலால் மிக கனமழை.. மின் விநியோகம் பாதிக்கப்படலாம்.. கொரோனா நோயாளிகளை காக்க என்ன நடவடிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: டவ்தே புயலால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் கொரோனா நோயாளிகளைக் கொண்ட மருத்துவமனைகள் போதியளவு மின்சார பேக்அப்களை கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    Tauktae Storm நாளை மறுநாள் Gujarat-ன் துவாரகை அருகே கரையை கடக்கிறது!

    மத்திய கிழக்கு அரபிக் கடலில் கடுமையான புயலாக இருந்த டவ்தே புயல், நேற்றிரவு மிகக் கடுமையான சூறாவளி புயலாகத் தீவிரமடைந்துள்ளது. இந்த புயல் இன்னும் அதி தீவிரமாக மாறி, வரும் மே 17ஆம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கவுள்ளது.

    யாருமே செய்ய தயங்கும் காரியம்.. சேப்பாக்கத்தை ஒரே நாளில் அசர வைத்த உதயநிதி ஸ்டாலின்! படத்தை பாருங்க யாருமே செய்ய தயங்கும் காரியம்.. சேப்பாக்கத்தை ஒரே நாளில் அசர வைத்த உதயநிதி ஸ்டாலின்! படத்தை பாருங்க

    இதன் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    மிகக் கனமழை

    மிகக் கனமழை

    இந்த புயல் காரணமாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் சுமார் 2-3 மீட்டர் உயரமுள்ள அலைகள் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலும் கடல் கொந்தளிப்புடனேயே காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மின் விநியோகம்

    மின் விநியோகம்

    இந்த டவ்தே புயலால் கடும் வெள்ளம் ஏற்படும் என்றும் ரயில் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும். படப் பகுதிகளிலும் இது மின்சார விநியோகம் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதியளவு மின்சார பேக்அப்பை வைத்துக்கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆலோசனை

    ஆலோசனை

    டவ்தே புயலைச் சமாளிப்பது குறித்து அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா, மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்களுடன் ஆலோசனை செய்தார். புயாலால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்ய 79 நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இவை தவிர ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளனர்.

    அமித் ஷா

    அமித் ஷா

    மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டவ்-தே புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் சுகாதார வசதிகள் தயார் நிலை குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகள், ஆய்வகங்கள், கொரோனா மையங்களில் போதுமான மின்சார பேக்அப் இருப்பதை உறுதி செய்யுமாறு அமித் ஷா அறிவுறுத்தினார்.

    மகாராஷ்டிரா & குஜராத்

    மகாராஷ்டிரா & குஜராத்

    மகாராஷ்டிராவில் கடலோர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மற்றும் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார். அதேபோல குஜராத்திலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    டவ்-தே புயலால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 18 படகுகள், குஜராத்தில் ஒரு படகைத் தவிர அனைத்தும் கடலிலிருந்து திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த படகுகளும் இன்னும் சில மணி நேரங்களில் கரைக்குத் திரும்பிவிடும் என அவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    Cyclone Tauktae latest update.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X