மோடி கையைவிட்டு போகும் முக்கிய மாநிலம்! மகாராஷ்டிராவில் ட்விஸ்ட்! பாஜகவுக்கு எதிராக போகும் 3 மேட்டர்
மும்பை: மகாராஷ்டிராவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு இந்தியா கூட்டணி வெல்லவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சமீபத்தில் வெளியான லோக்போல் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டு இருந்தது. அதில் மேலும் சில பாயிண்டுகள் விரிவாக விளக்கப்பட்டு இருந்தது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் நமது நாட்டில் சமீபத்தில் தான் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக தலைமையிலான என்டிஏ கட்சியும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 145 இடங்கள் தேவை. இதற்கிடையே நேற்றைய தினம் அங்கு லோக்போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
சர்வே முடிவுகள்: அங்கு மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் காங்கிரஸ்- சரத் பவார் என்சிபி- தாக்ரே சிவசேனா கூட்டணி 141 முதல் 154 இடங்களில் வெல்கிறது. மறுபுறம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 115 முதல் 128 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என லோக்போல் அமைப்பு தனது சர்வே முடிவுகளில் கூறியுள்ளது. சர்வே முடிவுகளுடன் அதில் வேறு சில முக்கிய விஷயங்களும் விளக்கப்பட்டுள்ளன..
இந்தியா கூட்டணிக்கு பிளஸ்: மகாராஷ்டிராவில் இப்போது ஆட்சியில் உள்ள ஷிண்டே அரசு மீது மக்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது. கிராமப்புற நெருக்கடி, விலைவாசி உயர்வு, ஊழல், சட்டம் ஒழுங்கு தோல்வி, மராட்டியர்களை அவமானப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை ஷிண்டே அரசுக்கு எதிராகப் போய் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கிறது. பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், மக்கள் இயல்பாகவே காங்கிரஸ் பக்கம் அதிகளவில் நகர்கிறார்கள். அங்கு பாஜகவுக்கு எதிராக மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு செல்வாக்கு அதிரிது வரும் நிலையில், கூட்டணியில் இருந்தாலும் இது தனிப்பட்ட முறையில் பாஜகவைப் பாதிக்கிறது. கமிஷன் உள்ளிட்ட பிரச்சினைகளால் பல முக்கிய தொழில்கள் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்குச் சென்று வருகிறது.
பாஜக கூட்டணிக்கு பிளஸ்: சிவசேனா, என்சிபி கட்சிகள் இரண்டாக பிளவுபட்ட இருக்கும் நிலையில், என்டிஏ கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனா மற்றும் சரத் பவார் என்சிபி கட்சிகளுக்கே அசல் கட்சியின் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் என்சிபி கட்சி வாக்குகள் முழுமையாக சரத் பவார் பக்கம் வந்துவிட்டது. ஆனால் சிவசேனா வாக்குகள் இன்னுமே கணிசமாக ஷிண்டே பக்கமே இருக்கிறது.
காங்கிரஸுக்கான ஆதரவு அதிகரித்தாலும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள வஞ்சித் பகுஜன் ஆகாடி, மஜ்லீஸ் உள்ளிட்ட கட்சிகள் மெல்ல வளர்ந்து வருகின்றனர்; இதனால் வாக்குகள் அதிகம் உடைகிறது. இதனால் சிறு சிறு அமைப்புகளுடன் அமையும் கூட்டணியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இதை அங்கு பாஜகவே சிறப்பாகச் செய்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications