Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்டை பாவாடை.. டான்ஸ் ஆடிய 6 பெண்கள்.. "சைகை" வேற.. பொழிந்த பணமழை.. கோர்ட் என்ன சொல்லுச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

மும்பை: குட்டை பாவாடை அணிவது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அது தொடர்பான தீர்ப்பு தரப்பட்டுள்ளது.

சில வழக்குகளின் தீர்ப்புகள் பலரது கவனத்தை திருப்பிவிடும்.. சிலசமயங்களில், வழக்குகளின் நோக்கமே, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துவிடும். இப்படித்தான், சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது..

Womens wear short skirts and What was the important judgment given by the Nagpur court

பலாத்காரம்: மைனர் பெண்ணை, 35 வயது காந்தீலால் என்பவர் பலாத்காரம் செய்துவிட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணையில் கைதாகி ஜெயிலுக்கு சென்றார். பிறகு ஜாமீனில் வெளிவந்து, தன் மீது போலியாக வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், "666 நாட்கள் அதாவது 2 வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டேன். எனக்கு ஜெயிலில் சரியான உள்ளாடைகூட இல்லை. ஜெயிலுக்குள் நிறைய வெயில் அடித்தது.. குளிர் அடித்தது.. அதற்கேற்ற உடைகள் இல்லை. வெளியே வந்தபிறகும்கூட, தோல் நோய்கள் வந்துவிட்டன. தலைவலியும் வந்துவிட்டது.. 6 பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிப்பவன் நான் மட்டும்தான்.. இப்போ என் வாழ்க்கையே நாசமாயிடுச்சு..

கெட்ட பெயர்: இருந்த வேலையும் போச்சு.. எனக்கு கெட்ட பெயர் வந்துவிட்டது. குடும்ப வாழ்க்கையை இழந்துவிட்டேன்.. கல்வி வாய்ப்பை இழந்துவிட்டேன். சிறைவாசத்தால், மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தையும் அனுபவிக்க முடியவில்லை. அதனால், மத்திய பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மனுவில் கேட்டிருந்தார். இந்த கேஸ் இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.

இப்படி எத்தனையோ விதமான வழக்குகள் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு வழக்கின் தீர்ப்பு பலரது கவனத்தை பெற்று வருகிறது. நாக்பூர் மாவட்டத்தின், திர்குரா என்ற இடத்தில் உள்ள 2 ஹாஸ்டல்கள் உள்ளன.. இந்த ஹாஸ்டல்களில், கடந்த மே மாதம் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, குட்டை பாவாடை அணிந்து 6 பெண்கள் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

பணமழை: அவர்கள் மீது பார்வையாளர்கள், பண மழையை பொழிந்திருக்கிறார்கள்.. எனவே, இந்திய தண்டனை சட்டம் - பிரிவு 294ன் கீழ், ஆபாச செயல்கள் சட்டத்தில் போலீசார் வழக்கும் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை, மும்பை ஹைகோர்ட்டின் நாக்பூர் கிளை விசாரித்தது.. தற்போது அது தொடர்பான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது. அந்த தீர்ப்புன் விவரம் இதுதான்.

குட்டை பாவாடை அணிவது, ஆத்திரமூட்டும் வகையில் டான்ஸ் ஆடுவது, எரிச்சலுாட்டும் வகையில் சைகைகளை செய்வது போன்றவைகளையெல்லாம் ஆபாசமான செயல்கள் என்று சொல்லிவிட முடியாது. காரணம், இப்போதைய காலகட்டத்தில், பெண்கள் இதுபோன்ற ஆடைகளை அணிவது சர்வ சாதாரணமானது. இந்த விஷயத்தில் முற்போக்கான பார்வையை எடுக்க விரும்புகிறோம்... இந்த விவகாரத்தில், போலீசார் பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்கிறோம் என்று உத்தரவில் கூறியுள்ளது.

கருத்துக்கள்: காலத்துக்கேற்ற தீர்ப்பு என்று ஒருதரப்பினர், இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.. ஆனால், இன்னொரு தரப்பிலோ, வரம்பு மீறும் சில ஆண்களால், இதுபோன்ற பெண்களுக்கு ஆபத்து வரலாம்.. அதுபோன்ற நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது தேவைப்படுமே? என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+