பருவமழை தீவிரம்.. நிரம்பும் கபினி அணை.. காவிரியில் நீர் திறப்பு.. மேட்டூர் அணை 58 அடியாக சரிவு
மைசூர்: கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் சாலையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்கிறது.

இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு கணிசமான அளவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருவதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2283.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 4442 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 6126 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.46 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 361 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 944 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு முற்றிலும் குறைந்து போனதால் 58 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 11 மணிக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த 3 நாட்களாக சற்றே அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடகா மாநிலம் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications