நாகை கந்தூரி விழாவுக்காக ஆட்டோவில் காவி தலைப்பாகை, சிவப்பு ஜிப்பா, வெள்ளை பேண்டில்! யார்னு பாருங்க
நாகை: நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் 467 ஆவது கந்தூரி விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முறை 467 ஆவது நாள் விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் நாகை யாஹூசைன் பள்ளி தெருவாசலில் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்கியது.
அன்று அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவுக்கு நேற்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்திருந்தார். அவருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 49 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த கந்தூரி விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டார். அவர் தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு வந்திருந்தார். அங்கு அவர் சந்தன கூடு திருவிழாவிலும் கலந்து கொண்டார். இந்த முறையும் அவர் கூட்டநெரிசல் காரணமாக ஆட்டோவில் வருகை தந்தார்.
கடும் கூட்டத்தில் ஆட்டோவில் தர்கா நிர்வாகிகளுடன் அமர்ந்து வந்திருந்தார். சிவப்பு நிற ஜிப்பா, வெள்ளை பேண்ட் அணிந்துக் கொண்டு இரு கைகளையும் கட்டிக் கொண்டு மனமுறுக பிரார்த்தனை செய்தார். நாகூருக்கு ஆண்டுதோறும் ஏ.ஆர்.ரகுமான் வருகை தருவார். அது போல் கொரோனாவுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் நடந்த கந்தூரி விழாவில் ரகுமான் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் பெரிய இடங்களில் இசைக் கச்சேரி நடத்தும் போது ஏ.ஆர்.ரகுமான் நாகூர் வந்து பெரியாண்டவரின் ஆசியை பெறுவது வழக்கம். எந்தவித பந்தாவும் இல்லாமல் சாமானியரை போல் வருகை தந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுவார். கடந்த முறை அவர் சந்தன கூடு விழாவுக்கு கூட்டநெரிசல் காரணமாக ஆட்டோவில் வந்திருந்தார். அவருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் வரவேற்புகளை செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications