நாகை: கோவிலுக்குள் பெண் கூலித்தொழிலாளி கூட்டு பலாத்காரம் - 2 மனித மிருகங்கள் கைது

கோவிலுக்குள் பெண் தொழிலாளி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பெண்ணை சிதைத்த மனித மிருகங்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நாகை : நாகை மாவட்டம் வெளிபாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணை வழிமறித்து தாக்கி கோயிலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மனித மிருகங்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு- காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் நடந்ததைப் போல தமிழகத்திலும் கோவிலில் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman sexually abused inside the temple in Nagapattinam

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற பெண்ணை தாக்கிய இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப்பெண் கணவரை இழந்தவர் என்று தெரியவந்துள்ளது. எனக்கு குழந்தை இருக்கிறது என்னை விட்டு விடுங்கள் என்று அழுத நிலையிலும் அந்த பெண்ணை விடாமல் சிதைத்துள்ளனர்.

பெண்ணை சிதைத்த அந்த கொடூர மிருகங்கள், அவரது சகோதரி வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் நாகை மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+