தம்மாத்துண்டு பிளேடு.. கைதி செய்த "சம்பவம்".. ஜெயிலுக்குள்ளே பதறிட்டாங்க எல்லாரும்.. குமரியில் பரபர
நாகர்கோவில்: கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் நீதிமன்ற கழிவறையில் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சாத்தாங்கரை பகுதியை சேர்ந்தவர் கபடி ஆசிரியர் அருள்பாதி. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கபடி விளையாட்டை கற்றுக்கொடுத்து வந்துள்ளார். இவரது மாணவர்கள் பலர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இவர் கபடி ஆசிரியராக இருந்தாலும், குடிப்பழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். இந்த பழக்கம் காரணமாக அடிக்கடி இவருக்கும் இவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சண்டை வந்திருக்கிறது.
தொடக்கத்தில் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடித்துக்கொண்டிருந்த அருள்பாதி பின்னர் தினமும் குடிக்க தொடங்கிவிட்டார். இது குடும்பத்திற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என எல்லோரிடத்திலும் பஞ்சாயத்தை இழுத்துக்கொண்டு வந்திருக்கிறார். வருமானம் பெரிய அளவு இல்லாததால் அருள்பாதியை வேலைக்கு போக சொல்லி குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனாலும் அவர் வேலைக்கு ஏதும் போகாமல் காலம் கழித்து வந்திருக்கிறார்.

குடிப்பழக்கம்
தினமும் குடிப்பது, குடிக்க பணம் இல்லையெனில் வீட்டில் உள்ளவர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டு வாங்கி செல்வது, அல்லது நண்பர்களிடம் பொய் சொல்லி பணத்தை வாங்குவது என அருள்பாதி தொடர்ந்து சின்ன சின்ன சலசலப்புகளில் சிக்கி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மார்பில் காயங்களுடன் அவர் சடலமாக மீட்டகப்பட்டார். இது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், இதனை சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

கொலை
அன்றைய தினம் அருள்பாதி சென்றிருந்த இடங்களில் காவலர்கள் விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் ஒரு சம்பவம் தெரிய வந்தது. அதாவது அருள்பாதி உயிரிழந்த தினத்தன்று மாலை டாஸ்மாக் கடையில் ஒருவரிடம் சண்டை போட்டிருக்கிறார். இதனையடுத்து அந்த நபரை தேடிய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர் இரணியல் பகுதியை சேர்ந்த ராஜன் என்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அதில், ராஜன்தான் பழிவாங்கும் நோக்கில் அருள்பாதியை கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

கைது
ராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலைக்கு அவர் பயன்படுத்திய கத்தியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 24) காலை இரணியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக போலீசாரால் அழைத்துவரப்பட்டார். அப்போது விசாரணைக்கு தாமதமாகியுள்ளது. இதை கவனித்த அருள்பாதி பாத்ரூம் போக வேண்டும் என்று கேட்டிருக்கிறார். போலீசார் அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்த கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்ட அருள்பாதி நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதேநேரம் உள்ளே ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது.

சம்பவம்
இதனையடுத்து போலீசார் கதவை தட்டியுள்ளனர். உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட போலீசார்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications