நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிகத் துணிச்சலான நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி எடுக்கிறார்… பொன். ராதாகிருஷ்ணன் புகழாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வர் பழனிசாமியை புகழ்ந்த பொன். ராதாகிருஷ்ணன்-வீடியோ

    நாகர்கோவில்: முதலமைச்சர் பழனிச்சாமி மிகத் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்புகழாரம் சூட்டியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக மீனவரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    The most courageous steps are taken by Chief Minister Palanisamy says Pon. Radhakrishnan

    அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாஜக தமிழ்நாட்டில் தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறது என்றும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் கூறினார்.

    சாஸ்திரி நினைவிடத்துக்கு பிரியங்கா வந்ததால் ஆச்சாரம்... கங்கை நீரை ஊற்றி கழுவிய பாஜகவினர்...சாஸ்திரி நினைவிடத்துக்கு பிரியங்கா வந்ததால் ஆச்சாரம்... கங்கை நீரை ஊற்றி கழுவிய பாஜகவினர்...

    தேர்தல் அறிக்கை என்பது அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடு; ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது; பணம் வாங்க கூடாது என்பது மக்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    பாஜக கடந்த 5 ஆண்டுகளில் செய்தது என்ன என்று கேட்கும் பிரியங்கா காந்தி அதற்கு முன்பு 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்றும் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள பிரியங்கா காந்தி போக, போக புரிந்து கொள்வார் என்றும் பேசினார்.

    English summary
    Pon.Radhakrishnan Said that The most courageous Chief Minister Palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X