Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோனிஷா காலை காதலன் பிடித்து கொள்ள.. தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. நாமக்கல் ஷாக்!

அக்காவை கொலை செய்த 17 வயது சிறுமி கைதானார்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: காதலனுடன் சேர்ந்து உடன்பிறந்த அக்காவை 17 வயது தங்கை கொலை செய்துள்ளார்.. காதலன் மோனிஷாவின் காலை பிடித்து கொள்ள... தங்கை தலைகாணியால் அக்காவின் முகத்தை அழுத்தியே கொன்றுள்ளார்.. நாமக்கல்லில் நடந்த இந்த கொடூரம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது!

நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பழனிசாமி... இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவருக்கு 2 மகள்கள்... மூத்த மகள் மோனிஷாவுக்கு 19 வயதாகிறது.. நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் காலேஜில் 2-ம் வருடம் படித்து வந்தார். 2 வது மகளுக்கு மகளான 17 வயது.. ஒரு அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் இருவரும் கூலிவேலைக்கு சென்றுவிட்டனர்.. ஸ்கூல், காலேஜ் லீவு என்பதால், 2 மகள்களும் வீட்டில் இருந்தனர். மதிய நேரம் திடீரென மோனிஷாவின் அலறல் சத்தம் கேட்டது.. இதனால் பதறிப்போன அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, தங்கையின் கை கிழிக்கப்பட்டு ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. அதை பற்றி கேட்டதற்கு, தங்களுக்குள் சண்டை வந்ததாகவும், அதனால் 2 பேரும் மாறி மாறி கையை கிழித்து கொண்டோம் என்றும் சொன்னார்.

நாமக்கல்

நாமக்கல்

அதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.. அப்போது மோனிஷாவின் கையும் கிழிக்கப்பட்டு, மூக்கு, முகத்தில் ரத்தம் வடிந்த நிலையிலும் மயங்கி விழுந்து கிடந்தார். இதனால் அக்கம்பக்கத்தினர் 2 பேரையுமே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று, பெற்றோருக்கும் தகவல் சொன்னார்கள். அப்போது டாக்டர்கள் மோனிஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.. 17 வயது தங்கைக்கு மட்டும் சிகிச்சை தந்தனர்.. அதற்குள் நாமக்கல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அக்கா - தங்கை

அக்கா - தங்கை

உடன்பிறந்த அக்கா - தங்கை சண்டையில் ஒரு உயிர் பலி போகுமா? அக்காவின் மூக்கு, முகத்தில் எப்படி ரத்தம் கொட்டியது என்றெல்லாம் சந்தேகம் எழுந்தது.. அதனால் தங்கையிடம் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் அவர் சொன்னதை கேட்டு போலீசார் அதிர்ந்தனர்.. இவர்களது ஊரை சேர்ந்தவர் ராகுல்.. 19 வயதாகிறது.. மோனிஷாவின் காலேஜில்தான் அவரும் படித்து வருகிறார்.

மறுப்பு

மறுப்பு

காலேஜுக்கு ஒரே பஸ்ஸில்தான் செல்வார்கள்.. மோனிஷாவை காதலிப்பதாக ராகுல் சொல்லி உள்ளார்.. ஆனால் அதற்கு மோனிஷா மறுத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்தும் மோனிஷா அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் ராகுல், மோனிஷாவின் தங்கையிடம் உதவி கேட்டுள்ளார்.. தங்கையும் ராகுலுக்காக அக்காவிடம் தூது சென்றார்.. அப்போது மோனிஷா தங்கைகையை கண்டித்துள்ளார்.. ராகுல் பழக்க வழக்கம் சரியில்லை, இந்த விஷயத்தில் எல்லாம் தலையிட கூடாது என்று தங்கையை அறிவுறுத்தி உள்ளார்!

நெருக்கம்

நெருக்கம்

இதற்கு பிறகு தங்கை அக்காவை கட்டாயப்படுத்தவில்லை.. ஆனால் ராகுல் அடங்கவில்லை.. அக்கா இல்லை என்றதும் தங்கையை காதலிக்க தொடங்கி உள்ளார்.. சிறுமியும் விவரம் புரியாமல் ராகுலை காதலித்துள்ளார்.. வீட்டில் யாருமில்லாத நேரம் வந்து போயுள்ளார்... இருவரும் நெருக்கமாக இருந்தும் உள்ளனர்... இந்த விஷயம் தெரிந்து மோனிஷா ராகுலிடம் சண்டை போட்டுள்ளார்.. தனது தங்கையை தொந்தரவு செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். இது ராகுலுக்கு எரிச்சலை தந்துள்ளது.

விளையாட்டு

விளையாட்டு

அதனால், ஒருமுறை தங்கையிடம் உன் அக்காவை போட்டதள்ளிடலாமா என்று விளையாட்டாக கேட்டுள்ளார்.. சிறுமியும் அதற்கு சரி என்று சொல்லி... மறுநாளே வீட்டுக்கு ராகுலை வரவழைத்துள்ளார். வீட்டில் ராகுலை பார்த்ததும் மோனிஷா கொதித்து போய்விட்டார்.. இங்கு ஏன் வந்தாய் என்று கேட்டு சண்டை ராகுலிடம் போட்டார்.. அதற்கு சிறுமி, உன்னை கொலை பண்ணத்தான் வந்திருக்கிறான் என்று சொன்னார்.. அப்போதும் விபரீதம் புரியாத மோனிஷா, வெளியே போ என்று ராகுலை எச்சரித்துவிட்டு பெட்ரூமுக்குள் சென்று படுத்து கொண்டார்.

நாடகம்

நாடகம்

அப்போது பின்னாடியே சென்ற ராகுல், மோனிஷாவின் காலை பிடித்துக்கொள்ள, அக்கா மோனிஷாவின் முகத்தில் தங்கை தலைகாணியை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி மோனிஷா மயங்கி, மூக்கிலும் ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது.. இதை பார்த்து பயந்துபோன ராகுல் அங்கிருந்து ஓடிவிட்டார்... அதற்கு பிறகு என்ன செய்வது என தெரியாமல் விழித்த தங்கை, உடனே ஒரு பிளேடு எடுத்து அக்காவின் கையையும், தனது கையையும் அறுத்து, சண்டையின் போது அறுத்துக்கொண்டதாக நாடகமாடி, அதற்கு பிறகு ஒப்பாரி வைத்து ஊரை கூட்டியுள்ளார்.

அமைதி

அமைதி

இது அத்தனையும் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீசார், தப்பி ஓடிய ராகுலையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மோனிஷாவின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 மகள்களில் மோனிஷா என்றால்தான் பெற்றோருக்கு உயிராம்.. அமைதியாக சுபாவம்.. எல்லார் மீதும் அன்பு கொண்டவர்.. தன்னைவிட அக்காவை பெற்றோருக்கு பிடிக்கிறதே என்று சின்ன வயசில் இருந்தே பொறாமையில் இருந்துள்ளார் தங்கை.

Recommended Video

    கொரோனாவால் குறைந்த குற்றசெயல்கள்
    மோனிஷா

    மோனிஷா

    இப்போது காதலுக்கும் குறுக்கே வருவதாக நினைத்து கொண்டுதான் கொலை செய்யும் வரை துணிந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லை.. அடிக்கடி ராகுல் வீட்டுக்கு வந்துபோனதில் சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.. இந்த விஷயத்தை பெற்றோரிடம் சொல்லி போட்டு தந்தது மோனிஷாதான் என்பதால் அவர் மீது கூடுதல் கோபம் இருந்துள்ளது.. உடன்பிறந்த அக்காவை, காதலருடன் சேர்ந்து தங்கை கொலை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+