நடிகர் மாரிமுத்து மீது திருச்செங்கோடு போலீசில் ஜோதிடர்கள் பரபரப்பு புகார்.. இன்ஸ்பெக்டர் அளித்த உறுதி
நாமக்கல்: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் முன்னேற அவரது உழைப்பும், திறமையும் தான் காரணம் என்று கூறியதுடன், ஜோதிடத்தால் அவர் இவ்வளவு உயரத்தை அடையவில்லை என்று நடிகர் மாரிமுத்து கூறியிருந்தார். அப்போது ஜோதிடர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருச்செங்கோடு காவல் நிலையத்தில் ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் மாரிமுத்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பின்னர் ஏக பிரபலம் ஆனார். இந்த சீரியலில் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார்.

எதிர் நீச்சல் சீரியலில் தமிழ் சீரியல்களில் மிகஉச்சகட்டவரவேற்பை பெற்றுள்ளது. மாரிமுத்து என்று சொல்வதை விட ஆவரை ஆதி குணசேகரன் என்ற அவரது கதாபாத்திரத்தை சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு பிரபலமாக உள்ளார்.
அண்மையில் ஜிதமிழ் தொலைக்காட்ச்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் vs மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் சந்திராஷ்டமம் அன்று செல்பி எடுத்து டெலிட் செய்து விட்டால் அந்த நல்ல நாளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் விவாத்தின் போது கூறினார்கள்.
இதை கேட்டு கோபம் அடைந்த மாரிமுத்து ஜோதிடம் குறித்தும் ஜோதிடர்கள் குறித்தும் விமர்சித்தார். அப்போது அவர் கூறும் போது, சென்னையில் வெள்ளம் வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. ஸ்டாலின் முதல்வராகவே வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள். ஆனால், இன்று அவர் முதல்வராகி உள்ளார்.
ரஜினிகாந்த் பிறந்த நாளில் பிறந்த நொடியில் பல்லாயிரம் குழந்தைகள் பிறந்தன. ஆனால் ரஜினிகாந்த் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் ஆனார். அதற்கு அவரது கடின உழைப்பு தான் காரணம் என்றும் ஜோதிடம் காரணம் இல்லை என்றும் கூறினார்.
அப்போது ஜோதிடர்களுக்கும், நடிகர் மாரிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாரிமுத்துவின் பேச்சுக்கு ஜோதிடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அண்மையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ. ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பல ஜோதிடர்கள் மாரிமுத்துவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஜோதிடர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் மாரிமுத்து பேசிவிட்டதாக குற்றம்சாட்டினார். அத்துடன் நடிகர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர். புகார் மனுவை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.. இந்த சம்பவத்தால் திருச்செங்கோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications