ஓட்டுக்கு வழங்க பதுக்கலா? நாமக்கல் வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. பரபர தகவல்
நாமக்கல்: நாமக்கல் தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பின்னணி பற்றிய முக்கிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தொகுதி வாரியாக 24X7 என்ற அடிப்படையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாமக்கல் மோகனூர் அருகே காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம் தேர்தலில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காந்தி நகரை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரான சந்திரசேகரன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இவர் நாமக்கல்லில் கல்வி நிறுவனம் ஒன்றில் பங்குதாரராகவும், நிதி நிறுவனங்களின் பங்குதாரராகவும் உள்ள நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று மதியம் 1 மணிக்கு சந்திரசேகரன் வீட்டில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வேளையில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாமக்கல் எஸ்பிஐ வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. முதற்கட்ட தகவலின்படி அவரது வீட்டில் இருந்து ரூ.4.50 கோடி ரொக்கப்பணம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications