தமிழகத்தில் நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறதா? நாமக்கல்லில் அமைச்சர் கே.என்.நேரு சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நகராட்சிகளை தரம் உயர்த்துவது பற்றி இப்போது எந்த திட்டமும் இல்லை என்றும் முதல்வரிடம் பேசி ஆலோத்த பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர், இன்னும் ஒரு வருடத்தில் நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்ற உறுதியை அளித்தார்.

அதன் விவரம் வருமாறு;

Recommended Video

    Tamilnadu-ல் நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறதா? KN Nehru சொன்ன பதில் *Tamilnadu
    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு நடத்தச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவை, மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கட்சியினருடன் சென்று மாவட்ட எல்லையில் வரவேற்று அழைத்துச் சென்றார். மற்ற மாவட்டங்களை காட்டிலும் நாமக்கல்லில் தனக்கு ஒரு படி மேலாகவே வரவேற்பு கிடைத்ததை எண்ணி அமைச்சர் நேரு பூரித்துப் போனார். இதன் காரணமாக மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமாரை அமைச்சர் நேரு தனது காரில் ஏற்றிக்கொண்டார்.

    பேருந்து நிலையம்

    பேருந்து நிலையம்

    நேராக பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்திற்கு சென்று ஆய்வு செய்த அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புறவழிச்சாலை பணிகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''ஏங்க இம்புட்டு நேரம் அதைப்பற்றித் தானே சொல்லிக்கொண்டு இருந்தேன், திரும்பக் கேட்கிறீங்க'' என்றவர் மீண்டும் அசராமல் விளக்கம் அளித்தார். அப்போது நில கையகப்படுத்துதல் பற்றி கூறிக்கொண்டிருக்கும் போது நேருவுக்கு ஏதோ சந்தேகம் எழுந்தது.

    23 கிமீ புறவழிச்சாலை

    23 கிமீ புறவழிச்சாலை

    உடனடியாக தனது அருகில் நின்ற மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக விவரம் கேட்டறிந்து, 11 கிராமங்கள் வழியாக 23 கிமீ புறவழிச்சாலை அமைக்கப்படுவதாக தெரிவித்தார் அமைச்சர் நேரு. அதைத் தொடர்ந்து நகராட்சிகள் தரம் உயர்த்துவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நகராட்சிகளை தரம் உயர்த்துவது பற்றி இப்போது எந்த திட்டமும் இல்லை என்றும் முதல்வரிடம் பேசி ஆலோத்த பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறினார்.

    எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு

    எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு

    அமைச்சர் கே.என்.நேரு நடத்திய இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பின் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த திமுக எம்.பி. ராஜேஷ்குமார், ''அண்ணே முன்னாடி வாங்க'' என அவரை அழைத்து தனது அருகில் முன் வரிசையில் அமர்த்தினார். இதனிடையே இந்த ஆய்வை முடித்துக் கொண்டு நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெறும் இடத்தையும் நேரு பார்வையிட்டு யோசனை வழங்கினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+