அண்ணனோடு சேர்ந்து சரக்கடித்த தங்கை.. போதையில் செஞ்ச ஷாக்.. அத்தையை சிக்க வைத்த மருமகன்
நாமக்கல்: அண்ணனும் தங்கையும் ஒன்றாக மது அருந்திய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்ணனை அடுப்பு ஊதும் குழாயை எடுத்து ஓங்கி அடித்து கொன்றுவிட்டார் அவரது தங்கை. இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என மறைந்தவர் போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கீழ்பாலப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வரதம்மாள். இவருடைய கணவர் செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (55) என்ற மகனும், சியாமளா (48) என்ற மகளும் இருந்தனர். இதில் பாண்டியன் கூலித்தொழிலாளியாவார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். மணப்பள்ளி பகுதியில் வசித்து வந்தார். அதேபோல், அவரது தங்கையான சியாமளாவிற்கும் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். தற்போது தாய் வரதம்மாள் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் சியாமளா ஆகியோரின் தாயாரான வரதம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வயோதிக காரணமாக இறந்து விட்டார்.

இதனால் பாண்டியன் கீழ்பாலப்பட்டிக்கு வந்து தாயாருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, தங்கையுடன் தங்கி இருந்தார். இதனிடையே, அண்ணன், தங்கை இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இருவரும் தாய் இறந்த நாளில் இருந்து அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மத அருந்தி வந்துள்ளனர்.
கடந்த திங்கள் அன்று ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் பாண்டியன் மதுபோதையில் அங்கேயே படுத்துவிட்டார்.
அப்போது அண்ணன் பாண்டியன் திட்டியதால் கோபம் குறையாமல் இருந்த சியாமளா, மது போதையில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு போய் உள்ளார். அவர் வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் இரும்பு குழலை எடுத்து பாண்டியன் தலையில் ஓங்கி அடித்து கொன்றுவிட்டார். இதையடுத்து, அங்கிருந்தபடி சியாமளா, தனது சகோதரன் பாண்டியனின் மகனான தனபால் என்பவரிடம், 'உனது தந்தை கீழே தவறி விழுந்து இறந்துவிட்டார். சீக்கிரம் வா' என்று பதறியபடி கூறியிருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்த தனபால், உடனடியாக கீழ்பாலப்பட்டிக்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார். அப்போது, தனது தந்தையின் தலையில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், இதுபற்றி மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மோகனூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், பாண்டியனை கொலை செய்தது அவரது தங்கையான சியாமளா தான் என்பதை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து சியாமளாவை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தனது சகோதரரையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications