காதலியா.. வீட்டில் பார்த்து வைத்த பெண்ணா.. யாரை மணப்பது.. குழம்பிய மணிகண்டன்.. தற்கொலை!
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
நாமக்கல்: மணிகண்டனுக்கு விபரீத குழப்பம் வந்துவிட்டது.. காதலியை கல்யாணம் செய்வதா, வீட்டில் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்வதா என்று மண்டை காய்ந்துவிட்டது.. இதற்கு வழி தெரியாமல் கடைசியில் தற்கொலையே செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார்.. அந்த பெண்ணும் மணிகண்டனை உயிருக்கு உயிராக விரும்பினார். ஒருநாள் இவர்களுக்குள் திடீரென சண்டை வந்துவிட்டது. அதனால், கருத்து வேறுபாட்டில் பிரிந்துவிட்டனர்.

இதனிடையே மணிகண்டனுக்கு வீட்டில் பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். நிச்சயம் செய்த பெண்ணை மணிகண்டனுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அதனால், அவருடன் பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி மகிழ்ந்தார்.
இது காதலிக்கு காதில் புகைச்சலை தந்தது.. ஒன்றாக ஊர் சுற்றி ஜாலியாக இருப்பதை பார்த்து வயிறு எரிந்தார். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மணிகண்டனிடம் வந்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். "உன்னை விட்டு விட்டு என்னால் இருக்க முடியவில்லை.. ஒன்றாக வாழலாம் வா" என்று சொல்லவும், மணிகண்டனுக்கு பழைய காதல் திரும்பவும் வந்துவிட்டது.
அதனால், காதலியையே கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னார். இந்த விஷயத்தை தன் பெற்றோரிடமும் சொன்னார் மணிகண்டன்.. வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. தாங்கள் பார்த்த பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் கட்டாயப்படுத்தினர். இதனால் மணிகண்டன் மனமுடைந்துவிட்டார்.. காதலியை மணப்பதா? வீட்டில் பார்த்த பெண்ணை மணப்பதா என்று குழம்பினார்.. ஒரு முடிவும் கிடைக்கவில்லை..
இறுதியில், வேறுவழியின்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டன் தூக்கில் தொங்குவதை, அக்கம்பக்கத்தினர் பார்த்து உடனடியாக பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். எந்த பெண்ணை மணப்பது என்று தெரியாமல் விழித்த மணிகண்டன் தூக்கில் தொங்கிய சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications