‛‛ஜஸ்ட் மிஸ்’’.. பூமிக்கு மிக நெருக்கமாக வந்த விண்கல்.. பேராபத்தில் இருந்து தப்பித்த பூமி
நியூயார்க்: பூமிக்கு மிக நெருக்கமாக 29,000 கி.மீ வேகத்தில் 380 அடி அளவுள்ள விண்கல் ஒன்று கடந்து சென்றுள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, “நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது” என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் நேற்று பூமிக்கு அருகே விண்கல் ஒன்று கடந்து சென்றிருப்பதை கண்டு பிடித்திருக்கிறது.
'2011 MW1' எனும் பெயர் கொண்ட 290 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று நேற்று பூமியை மிக நெருக்கமாக கடந்து சென்றிருக்கிறது. இது பூமியிலிருந்து சுமார் 75 லட்சம் கி.மீ தூரத்தில் பூமியை கடந்திருக்கிறது. இந்த தொலைவு மிக நீண்டதாக தெரியலாம். ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது மிகக் குறைவான தூரம்தான். பூமியிலிருந்து செவ்வாய்க்கு 5.4 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் 75 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கம்.

நிலவுடன் ஒப்பிடும்போது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 15 மடங்கு தூரத்தில் இந்த விண்கல் கடந்து சென்றிருக்கிறது. 28,946 கி.மீ வேகத்தில் சென்ற இந்த விண்கல், அதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருந்தால் கூட பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால், தற்போது இப்படியான ஆபத்து எதுவும் இல்லை என நாசா கூறுகிறது.
ஒருவேளை இது பூமியை இது தாக்கியிருந்தால், விண்கல் விழுந்த இடத்தில் 5-8 கி.மீ தொலைவில் காண்கிரீட் கட்டிடங்கள் எதுவும் இருக்காது. அதாவது நவீன அணு குண்டுக்கு சமமான அளவு வெப்பத்தை இது வெளிப்படுத்தும். இதனால் சுமார் 2 லட்சம் மக்கள் உடனடியாக சாம்பலாகிவிடுவார்கள். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 8 கி.மீ சுற்றளவில் வெறும் நெருப்பு மட்டும் தான் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications