நிலைமை ரொம்ப மோசம்.. ஆப்கன் குழந்தைகள் பட்டினியால் சாக போகிறார்கள்.. ஐநா வார்னிங்
காபூலில் நிலைமை மோசமாகும் என்று ஐநா எச்சரித்துள்ளது
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா எச்சரித்துள்ளது.. உரிய நேரத்தில் சாப்பாடு கிடைக்காவிட்டால் லட்சக்கணக்கான ஆப்கனியர்களும், குழந்தைகளும் உயிரிழக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
20 வருஷங்கள் கழித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் தாலிபான்கள்.. இப்போதைக்கு தலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், தற்காலிக அரசு அமைக்கப்பட்டிருந்தாலும், ஏகப்பட்ட குழப்பங்களும் சர்ச்சைகளும் நிலவி வருகின்றன..
அந்த அரசு இதுவரை பதவி ஏற்காமல் செயல்பட்டு வருகிறது.. இவர்கள் எந்த மாதிரியான ஆட்சியை தரப்போகிறார்கள் என்பது தெரியாமல், அந்த நாட்டு மக்கள் கலங்கி போய் பீதியில் உள்ளனர்..

கலக்கம்
பலர் உயிரை கையில்பிடித்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.. அங்கே இருப்பவர்களும் வேலையில்லாமலும், உணவு இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லையாம்.. கடுமையான நிதி நெருக்கடிக்கு அந்த நாடு ஆளாகி உள்ளது.. மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்திவிட்டது..

நிதி நெருக்கடி
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் பணம் செலுத்துவதை நிறுத்தி கொண்டது.. எல்லா பக்கமும் உதவி வருவது நின்றுவிட்டதால், நிதி நிலைமை அதல பாதாளத்தில் அங்கு தொங்கி கொண்டுள்ளது.. வீட்டில் உள்ள பொருட்களை ரோட்டில் போட்டு விற்று சாப்பிடும் நிலைமைக்கு அந்த மக்கள் ஆளாகி உள்ளனர்.. அந்த பணத்தை வைத்துதான் குழந்தைகளுக்கு ஒருவேளையாவது சாப்பாடு வாங்கி தர முடிகிறது என்று கண்ணீருடன் சொல்கிறார்கள்.

வார்னிங்
இப்படிப்பட்ட சூழலில், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் குளிர்காலத்தில் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐநா வார்னிங் தந்துள்ளது.. உலக உணவு திட்ட அமைப்பின் தலைமை இயக்குனர் பிஸ்லே ஆப்கன் சொல்லும்போது, "ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மை மற்றும் பட்டினியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.. 2 மாதங்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 14 மில்லியனாக இருந்தது.

வீழ்ச்சி
நாம் கணிப்பது நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக நிரூபணமாகிவிடும்.. யாரும் எதிர்பார்த்ததை விட வேகமாக காபூல் வீழ்ச்சியடைந்தது... பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.. குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்... மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்... நிலைமை ரொம்ப மோசமாக போகிறது.. மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்..












Click it and Unblock the Notifications