சிரித்தால் திருமணம் செல்லாது! படுக்கையறையில் மணமக்களோடு தாய்.. தம்பதிக்கு எஞ்சிய உணவு! எங்க தெரியுமா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் ஒருமுறை நிகழும் மறக்க முடியாத திருநாளாகும்.. இதற்காகவே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்பவர்கள் உண்டு.. அதேசமயம், திருமண கலாச்சாரங்கள் உலகம் முழுவதுமே தவறாமல் கடைப்பிடிக்கப்படுகின்றன.. நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் இந்த கலாச்சாரங்கள் வித்தியாசப்பட்டாலும், இன்றுவரை பாரம்பரியம் மாறாமல் அவைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும் சில திருமண சடங்குகள் உலகில் வித்தியாசமான முறையில் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வைத்துவிடும்.. அப்படிப்பட்ட சில சடங்குகளை இங்கே பார்க்கலாம்.

ஸ்காட்லாந்து நாட்டில், மணமக்களின் மீது கருப்பு சாயம் பூசுவது ஒரு சடங்காகும். அதாவது, மணமக்களை அவர்களின் நண்பர்கள், பலவித பொருட்களை கொண்டு அலங்கரித்திருக்கும் இம்மணமக்களை அலங்கோலமாக்கி விடுவார்கள்.. இப்படி செய்வது திருஷ்டி கழிப்பது போலவாம் இதனால், மணமக்கள் மீதிருந்த தீய சக்திகளை விலகிவிடுவதாக நம்பப்படுகிறது.

first night wedding tradition

காங்கோவில் திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் சிரிக்கவே கூடாதாம்.... போட்டோ எடுக்கும் போது கூட சிரிக்கக்கூடாது.. மேலும், மணமக்களின் இரு தரப்பிலும் "விலை" பேரம் பேசுவார்களாம்.. அந்த நாளில் மட்டும் மணமக்கள் சிரிக்கக் கூடாது என்பது பழக்கமாக உள்ளது..

மணமகன் உடைக்கும் அம்பு

சீனாவின் யுகர் கலாச்சாரத்தில் மணமகன், மணமகளின் மீது 3 முறை அம்பு செலுத்த வேண்டுமாம். பெயருக்குதான் அம்பு, ஆனால், அது கூர்மையாக இருக்கும் என்றாலும் லேசாக வலி இருக்குமாம்.,. மணப்பெண்ணின் மீது அம்பு செலுத்தியதுமே, மணமகன், ஒவ்வொரு அம்பை உடைத்து, நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று சத்தியம்
செய்வாராம்.

கொரியன் திருமண சடங்கில், மாப்பிள்ளையின் நண்பர்கள், மாப்பிள்ளையின் ஷூ மற்றும் ஷாக்ஸை கழற்றி, மீன்களை வைத்து பாதத்தில் அடிப்பார்களாம். இந்த சடங்கு முடிந்த பிறகுதான், மணமகனை முதலிரவிற்கு அனுப்பி வைப்பார்கள்.

தெற்கு சூடானில் உள்ள நியூர் பழங்குடியினரின் வழக்கப்படி, மணப்பெண் 2 குழந்தையை பெற்றெடுத்தால் தான், அவள் திருமணம் முழுமை பெறும்.. 2 குழந்தையை பெற்றெடுக்க முடியாவிட்டால், மனைவியை விவாகரத்து செய்ய, கணவனுக்கு உரிமை உள்ளதாம்.

படுக்கையறையில் அம்மா

வடக்கு போர்னியோவின் டிடாங் பழங்குடியினர், திருமணம் முடித்தபிறகு, மணமக்கள் 3 பகல் மற்றும் 3 இரவுகள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது...இதிலேயே மற்றொரு பிரிவினர், 3 நாள் வீட்டை தாண்டாமல் இருப்பதுடன், அந்த 3 நாளில் சிறுநீர் அல்லது மலம் கழிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஆப்பிரிக்காவின் சில கிராம பகுதிகளில், முதலிரவின் போது படுக்கையறைக்கு ஒரு வயதான பெண் கூடவே செல்வாராம்.. பல நேரங்களில் பெண்ணின் அம்மாவே , முதலிரவின்போது செல்வாராம்.. இதற்கு காரணம், மணமகனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மணப்பெண்ணுக்கு சொல்லி தருவாராம்.

எச்சில் உணவுகள்

பிரஞ்சு பழக்கவழக்கங்களின்படி, மிச்சம் வைக்கும் சாப்பாட்டைதான், மணமக்களுக்கு சாப்பிட தருவார்களாம்.. எஞ்சிய உணவுகளை ஒரு பானையில் தம்பதியருக்கு சாப்பிட தந்தால், அது அவர்களுக்கு ஆற்றலை கொடுக்கும் என்பது நம்பிக்கையாகும்.. முன்பு சாப்பாடு என்றிருந்த பழக்கம், இப்போது, சாக்லேட், மதுபானமாக மாறியிருக்கிறது.

பிரான்ஸில் மணமக்களின் முதலிரவின் போது, நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து, வீட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டு பாத்திரத்தை தட்டி கூச்சல் எழுப்புவார்களாம்.. இவர்கள் கூச்சல் நிற்க வேண்டுமானால், மணமக்கள், இவர்களுக்கு சாப்பாடு, மதுபானம் தர வேண்டுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+