Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருட்டில் ஈடுபட்டதாக இந்தியாவை சேர்ந்த இரண்டு மாணவிகள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் குடியேறுவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றிக்காக அமெரிக்கா செல்ல இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், அப்படி செல்வது எளிதானதாக இருப்பதில்லை. எனவே சட்ட விரோதமாகவும் அமெரிக்காவுக்குள் நுழைய இந்தியர்கள் முயன்று வருகின்றனர். இப்படி இருக்கையில், படிப்பதற்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவிகள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arrest of two female students by the police for shoplifting in US has caused a shock


பவ்யா லிங்கனகுண்டா, யாமினி வல்கல்புடி ஆகிய மாணவிகள் தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் குண்டூரிலிருந்து அமெரிக்காவுக்கு கல்வி பயில வந்திருக்கிறார்கள். நியூ ஜெர்சியில் உள்ள ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இவர்களுக்கு சீட் கிடைத்திருக்கிறது. குழந்தைகள் அமெரிக்காவில் படிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கையை நொறுக்கும் விதமாக மாணவிகளின் செயல் அமைந்திருக்கிறது.

அதாவது மார்ச் 19ம் தேதியன்று இந்த மாணவிகள் இருவரும் நியூ ஜெர்சியில் உள்ள யுஎஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு இரண்டு பொருட்களை மட்டும் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே உள்ளூர் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கான காரணம், அவர்கள் பல பொருட்களை திருடி விட்டு அதற்கு பணம் செலுத்தாமல் வந்திருப்பதுதான். இது குறித்து ஹோபோகன் நகர போலீசார் கூறுகையில், “மாணவிகள் இருவரும் வழக்கம்போல கடைக்குள் நுழைந்திருக்கிறார்கள். தாங்கள் இரண்டு பொருட்களை மட்டுமே எடுத்ததாக கூறி அதற்கான பணத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பணம் கொடுக்காமல் 27 பொருட்களை எடுத்து வந்திருக்கிறார்கள். இதனுடைய மதிப்பு ரூ.13,000.

நாங்கள் அவர்களை கைது செய்த பின்னர், முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். தாங்கள் 27 பொருட்களுக்கு பணம் கொடுக்க மறந்துவிட்டதாக கதை அடித்தனர். பின்னர் எங்கள் பாணியில் விசாரணை நடத்தியதை அடுத்து, பொருளுக்கான முழு தொகையையும் கொடுப்பதாகவும், வேண்டும் எனில் திருடப்பட்ட பொருட்களின் மொத்த தொகைக்கும் இரண்டு மடங்கு பணம் தருவதாக கூறினர். மேலும், எங்களிடம் மன்னிப்பு கேட்ட அவர்கள், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்” என்று கூறியுள்ளனர்.

என்ன காரணம் சொன்னாலும், மாணவிகள் செய்தது குற்றம் என்று காவல்துறை உறுதியாக கூறியுள்ளது. மட்டுமல்லாது, இது போன்ற குற்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மாணவிகளின் வேலை மற்றும் H1b விசா செயல்முறையை பாதிக்கும் என்றும் காவல்துறையினர் விளக்கியுள்ளனர்.

இறுதியில் இந்த வழக்கில் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்று காவல்துறை மாணவிகளை கேட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் திருட்டு வழக்கில் சிக்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர், கடந்த 2015ம் ஆண்டு ரூ.3.75 லட்சம் மதிப்பிலான பொருட்களை இந்திய பெண்மணி ஒருவர் திருடி சென்றிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது.

சமீப நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த சிலர் போலியான ஆவணங்களை கொடுத்து வேலைக்கு சேருவது, ஆள்மாறாட்டம் செய்து இன்டர்வியூவில் பங்கேற்பது என பல்வேறு தில்லு முல்லு வேலைகளை செய்து சிக்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது சூப்பர் மார்கெட்டில் திருட்டில் ஈடுபட்டு இந்தியாவை சேர்ந்த இரண்டு மாணவிகள் சிக்கியிருப்பது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+