ஆ..ஆ.. துடிதுடித்து இறந்த இளைஞர்.. முகம் கழுவியபோது கொடுமை..பாதி மூளையை காணோமே..ஷாக்கில் அமெரிக்கா
தலையை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையின் ஒருபகுதியை நுண்ணுயிரிகள் தின்று கொண்டிருந்தன.
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்திருக்கும் ஒரு கொடூர சம்பவம் அந்நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது. அமெரிக்க அரசாங்கமும் இதுதொடர்பான எச்சரிக்கையை விடுத்திருப்பதுதான் இந்த பிரச்சினையின் வீரியத்தை நமக்கு உணர்த்துகிறது.
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது முகத்தை கழுவிய பிறகு அவர் ஒரு வித்தியாசமான நோயால் தாக்கப்பட்டிருக்கிறார். டாக்டர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
கடைசி நிமிடத்தில், அவரது மூளையை ஸ்கேன் செய்து டாக்டர்கள் பயத்தில் அலறிவிட்டனர். ஏனெனில் அவரது மூளையின் ஒருபகுதியை பயங்கர கிருமிகள் தின்றுக் கொண்டிருந்தன. அது என்ன கிருமி? அது எப்படி அவரை தாக்கியது? இந்தியாவிலும் இந்தக் கிருமி இருக்கிறதா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

எமனாக மாறிய தண்ணீர்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பீட்டர் ஸ்டீவ் (26). ஐடி நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு, வேலையை முடித்து வீட்டுக்கு வந்த பீட்டர் ஸ்டீவ், வழக்கம் போல தனது முகத்தை வாஷ் பேஷினில் கழுவியுள்ளார். பின்னர் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கிவிட்டார். ஆனால், அடுத்த நாள் காலையில் அவரால் படுக்கையை விட்டு எழுந்தரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பயங்கர காய்ச்சல் அவருக்கு அடித்தது. மேலும், கடுமையான தலைவலியும் இருந்துள்ளது.

பயங்கர காய்ச்சல்
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பீட்டர் அப்படியே படுத்துக் கொண்டே இருந்துள்ளார். ஆனால், நேரம் ஆக ஆக தலைவலியின் வீரியம் தாங்க முடியாத அளவுக்கு சென்றுள்ளது. இதுவரை இதுபோன்ற தலைவலியை உணராத பீட்டர் ஸ்டீவ், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சாதாரண காய்ச்சலுக்கான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை கொடுத்துள்ளார். ஒரு ஊசியும் போட்டு விட்டிருக்கிறார். எனினும், பீட்டருக்கு சிறிதும் காய்ச்சல் குறையவில்லை. அடுத்த நாள் காய்ச்சலின் தீவிரம் அதிகமானதுடன் வாந்தியும், தலைசுற்றலும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நடந்தால் பேலன்ஸ் கிடைக்காமலும் போயுள்ளது.

குழம்பிய மருத்துவர்கள்
அப்போதுதான் அவருக்கு இது சாதாரண காய்ச்சல் இல்லை என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், அவரால் தனியாக மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, தனது நண்பர்களை போனில் அழைத்து பீட்டர் விஷயத்தை சொல்ல, அவர்கள் அவரை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது நிலைமையை கண்ட மருத்துவர்கள், அவரை உடனடியாக அட்மிட் செய்தனர். தொடர்ந்து காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்தும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், அவரது நாடித்துடிப்பும் குறைந்து போயுள்ளது. அப்போதுதான் மருத்துவர்கள், பீட்டரிடம் காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பு என்னென்ன செய்தார் எனக் கேட்டுள்ளனர்.

மூளையை தின்னும் அமீபா
இதையடுத்து, இரவு வந்து முகத்தை கழுவிய விஷயத்தை சொல்ல மருத்துவர்களுக்கு பொறி தட்டியுள்ளது. இதையடுத்து, அவரது மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது மூளையின் ஒருபகுதியை நுண்ணுயிரிகள் பிய்த்து தின்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது. பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த நுண்ணுயிரிகள் 'நய்க்லேரியா ஃபவ்லேரி' (Naegleria fowleri) எனப்படும் ஒருவகை அமீபா ஆகும். இது, பொதுவாக 'மூளையை தின்னும் அமீபா' என அழைக்கப்படுகிறது. நல்ல தண்ணீரில் வாழும் இந்த அமீபா, மூக்கின் வழியாக உள்ளே சென்று மூளையை தாக்கக்கூடியவையாம். இந்த அமீபா மூளைக்கு சென்றுவிட்டால் சிறிது நேரத்திலேயே பன்மடங்கு பெருகி மூளையை பிய்த்து தின்ன தொடங்கிவிடுமாம்.

எப்படி மனிதனை தாக்கும்?
இந்த அமீபா, ஒருவின் மூளைக்கு சென்றுவிட்டால் அவரை காப்பற்றுவது என்பது முடியாத செயல் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த அமீபா வாய் வழியாக சென்றால் ஒன்றும் ஆகாது. சிலர் முகத்தை கழுவும் போது தண்ணீரை மூக்கால் உறிஞ்சி விடுவார்கள். சிலரோ தங்கள் மூக்கு துவாரத்தில் தண்ணீரை விட்டு கழுவுவார்கள். இதுபோன்ற சமயங்களில்தான் இந்த அமீபாக்கள் மூக்கினுள் சென்றுவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, முகத்தை கழுவும் போது டேப் தண்ணீரில் கழுவாமல் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கழுவுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனிடையே, புளோரிடா மாகாண அரசும் யாரும் முகத்தை டேப் தண்ணீரில் கழுவ வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் இந்த அமீபா வாழும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது அரிய வகை அமீபா என்பதுதான் சற்று ஆறுதலான செய்தி.
-
F-18 போர் விமானத்தை வெற்றிகரமாக தாக்கினோம்.. வீடியோ வெளியிட்ட ஈரான்.. அமெரிக்கா சொல்வது என்ன? -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications