கடலில் கண்டெடுக்கப்பட்ட சீன உளவு பலூன் பாகங்கள்! கண்டுபிடித்த அமெரிக்காவிற்கு ஷாக்! என்ன இருந்தது?
அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனின் பாகங்களை மீட்ட அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்க அரசால் அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவிற்கு சொந்தமான பலூனின் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த பாகங்கள் குறித்த முக்கிய தகவல்களை சீனா வெளியிட்டு உள்ளது.
யுஎப்ஓக்கள் குறித்த அச்சம் உலகம் முழுக்க எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் அடுத்தடுத்து யுஎப்ஓக்கள் கடந்த 3 நாட்களாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சீனாவிலும் இன்று ஒரு யுஎப்ஓ கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சீன விமானப்படை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
3 நாட்களுக்கு முன் அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை முதல்முறையாக சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.

விமானம்
அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கனடா வானில் பறந்த மர்ம பொருள் அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் பின் நேற்று முதல்நாள் அதிகாலை மூன்றாவது முறையாக அமெரிக்கா - கனடா எல்லையில் லேக் ஹுரோன் என்று பகுதியில் இன்னொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. கனடா - அமெரிக்கா எல்லைக்கு அருகே பறந்து கொண்டு இருந்த போது இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

விமானப்படை
அமெரிக்காவிற்கு மேலே சீனாவின் பலூன்கள் பறந்த நிலையில்தான் இந்த யுஎப்ஓ குறித்த அச்சம் எழுந்துள்ளது. சீன பலூன்கள் குறித்தே இன்னும் முழுமையாக முடிவு தெரியவில்லை. சீன பலூன்களில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்பதே தெரியாத நிலையில்தான் இந்த யுஎப்ஓக்கள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் சீனாவிற்கு என்ன மாதிரியான உளவு தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. வடக்கு அமெரிக்கா மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது. இந்த பலூன் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

சீன பலூன்
பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கள் அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் இதில் இருந்தன. அதோடு இவை ஹீலியம் உதவியுடன் வானில் பறந்து வந்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. இந்த பலூன் எங்களுடைய பலூன் கிடையாது. இதற்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று சீனா கூறி வந்தது. ஆனால் சீனாவின் உளவு பலூன் இது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. முதலில் வெள்ளை நிறத்தில் ஏதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது.

சுட்டு வீழ்த்தியது
காரணம் பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன. அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. ஆனால் இதை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள். முக்கியமாக இது உளவு கருவி எதையும் கொண்டு இருக்கவில்லை. அமெரிக்காவின் வான் எல்லைக்குள் இது தவறுதலாக சென்றுவிட்டது என்று சீனா விளக்கம் அளித்தது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. அட்லாண்டிக் கடலுக்கு மேலே சென்ற பின் அமெரிக்க போர் விமானத்தின் எப் 22 விமானங்கள் 3 இதை சுற்றி பறந்து சுட்டு வீழ்த்தின. கிழக்கு கடல் பகுதியில் இந்த பலூன் வீழ்த்தப்பட்டது. தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் இதன் பாகங்கள் விழுந்துள்ளன. அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்டு உள்ளது.

பாகங்கள் மீட்பு
இந்த பாகங்களை மீட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக வானிலை காரணமாக இந்த பாகங்களை மீட்பதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இதன் பெரும்பாலான பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இது பல மீட்டர்கள் நீளத்தில் பெரிய ஆன்டெனாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பல சென்சார்கள் இருந்துள்ளன. இதெல்லாம் கண்டிப்பாக உளவு செய்ய பயன்படுத்தப்படும் சென்சார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கண்டிப்பாக இவை வானிலையை பரிசோதிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சென்சார்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார்கள்
நேற்று கடலில் இருந்து முக்கியமான சென்சார்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாகங்கள் இதுவரை 4920 அடி நீளத்திற்கு இருந்துள்ளது. 1500 மீட்டர் அளவு கொண்டதாக இருந்துள்ளது. இது கிடைமட்ட அளவு. அதுவே பலூன் கோளமாக இருக்கும் நிலையில் இதன் அளவு 200 அடியாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது 200 அடி உயரம் கொண்ட பலூன் விண்ணில் பறந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை 133 அடியாகும். இதில் இருக்கும் பாகங்கள் எல்லாம் ஒரு பிரைவேட் ஜெட் அளவிற்கு அதிக எடை கொண்டதாக இருந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications