டிரம்ப் தந்த கொரோனா வார்னிங்.. அப்படியே நடக்கிறது.. கொத்து கொத்தாக பாதிப்பு.. கலக்கத்தில் நியூயார்க்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று புதிதாக 31000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1150 பேர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    பிரான்ஸ், ஜெர்மன் போக வேண்டிய மாஸ்க்குகளை தட்டிப்பறித்த டிரம்ப்

    அமெரிக்காவில் கொரோனா வைரஸின் வேகம் நினைத்ததை விட அதிகமாக பரவி வருகிறது. உலகிலேயே கொரோனாவால் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளான நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றுள்ளது. அங்கு இந்த ஜூன் மாத இறுதிக்குள் 2 லட்சம் பேர் பலியாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    முக்கியமாக இந்த வாரம் மற்றும் அடுத்த வாரங்களில் அமெரிக்காவில் கொரோனா மிக மோசமாக தீவிரம் அடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

    டிரம்ப் எச்சரிக்கை

    டிரம்ப் எச்சரிக்கை

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தார். அவர் எச்சரிக்கை விடுத்தது போலவே நேற்று மோசமான நாள் ஆகும். கொரோனாவால் அமெரிக்காவில் 367,004 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அமெரிக்காவில் 10871 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 31000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1150 பேர் பலியாகி உள்ளனர்.

    நியூயார்க் நிலை

    நியூயார்க் நிலை

    உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அமெரிக்காவில் நியூயார்க் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 131,916 பேருக்கு கொரோனா உள்ளது. ஸ்பெயின் இத்தாலிக்கு இணையாக சிறிய மாகாணமான நியூயார்க்கில் மட்டும் கொரோனா உள்ளது. அங்கு சீனாவை விட அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று மட்டும் 8890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    நியூயார்க்கில் கொரோனா காரணமாக இதுவரை 4,758 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் என்ற பெயரை சீனாவின் வுஹனிடம் இருந்து நியூயார்க் தட்டிப்பறித்து உள்ளது. அதற்கு அடுத்து அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் 41,090 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 1003 பேர் பலியாகி உள்ளனர். 3,585 பேர் நேற்று மட்டும் பாதிக்கப்பட்டனர்.

    அந்த நாட்கள்

    அந்த நாட்கள்

    அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. அங்கு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த மிக மோசமான வாரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட 3.6 லட்சம் பேரில் 9 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவர்களில் பலர் பலியாக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+