இந்தியாவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.. ரொம்ப ஆபத்தான முடிவு.. டிரம்பை எச்சரித்த சர்வதேச வல்லுனர்!
நியூயார்க்: ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த வரி முடிவுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தொடங்கி உள்ள வர்த்தக போர் பணவீக்கத்தைத் தூண்டி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை மந்தநிலைக்கு கேட்ஸ் செல்லும் என்று எச்சரித்துள்ளார்.
முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா பகைக்க கூடாது. தங்களுக்கு இணங்குமாறு கேட்காமல்.. இந்தியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா இணங்கி சென்று.. அவர்களுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகள் அணிசேரா நாடுகள். அவை உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .

டிரம்ப் அறிமுகம் செய்த சமீபத்திய கட்டணங்கள் பணவீக்கத்தை அதிகரிக்கும். உலக அளவில் நிலையற்ற தன்மை ஏற்படும். இது போன்ற நேரத்தில் இந்தியா போன்ற அணிசேரா நாடுகளுடன் டிரம்ப் நட்பையே கடைபிடிக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி கட்டணங்கள் காரணமாக அமெரிக்கா பெரிய இழப்புகளை சந்திக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்க மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
தொடர் சரிவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிமுகம் செய்த பின்.. இந்த வாரம் மார்க்கெட் மிக மோசமாக தொடங்கி உள்ளது. சீனாவில் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக மார்க்கெட் சரிந்து உள்ளது. உலகம் முழுக்க ஒரே கையெழுத்தில் பொருளாதார அழிவை தூண்டிவிட்டுள்ளார் டிரம்ப்.
உலக அளவில் எந்தெந்த மார்கெட்டுகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
பங்கு சந்தை சரிவால் ஜப்பான் மார்க்கெட் மூடப்பட்டது
ஜப்பானின் நிக்கேய் 225 9% குறைந்தது
சிங்கப்பூர் பங்குச் சந்தை 5.5% சரிவு
மலேசியா பங்குச் சந்தை 4% சரிவு
ஹாங்காங் பங்குச் சந்தை 8.8% சரிவு
தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான TSMC 10% சரிந்தது
தைவான் பங்கு குறியீடு திறந்த நிலையில் 9.8% சரிந்தது
ஜெர்மனி பங்குச் சந்தை எதிர்காலம் 5% குறைந்தது
ஜப்பானின் TOPIX வங்கிக் குறியீடு 14%க்கு மேல் குறைந்துள்ளது
ஷாங்காய் கச்சா எண்ணெய் 7% குறைந்தது
ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 6.4 சதவீதம் சரிவு
நாஸ்டாக் 100 ஃபியூச்சர்ஸ் 6%க்கு மேல் வீழ்ச்சி
பிட்காயின் $78,000 க்கு கீழ் வருகிறது












Click it and Unblock the Notifications