என்னாது, கோவிட் தடுப்பூசி 'இலுமினாட்டி'யின் சதியா? பகீரை கிளப்பியது யார் பாருங்க.. வெடித்தது சர்ச்சை
நியூயார்க்: கொரோனா தொற்றிலிருந்து தடுப்பூசியின் உதவியுடன் உலகம் மெல்ல மீண்டு வந்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த தடுப்பூசி மனித வளத்தை கன்ட்ரோல் செய்ய இலுமினாட்டிகள் போன்றவர்கள் கண்டுபிடித்த ஒரு பயோ-வெப்பன் என்று ஃபைசர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மற்றும் துணைத் தலைவர் மைக்கேல் யேடன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று 2020ம் ஆண்டு மத்தியில் வேகமெடுத்தது. இது என்ன நோய் என்றே தெரியாமல் வாழ்ந்த மக்கள் தொடங்கி மருத்துவர் படித்த விஞ்ஞானிகள் வரை இந்த தொற்று பாதிப்பு கொன்று குவித்தது. இதுவரை இந்த தொற்று பாதிப்பு சுமார் 68 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல 68 லட்சம் பேர் தற்போதுவரை இந்த பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்த காலகட்டத்தில் மருத்துவ உலகம் தனது முழு முயற்சியையும் பயன்படுத்தி இதற்கு எதிராக இயங்க தொடங்கியது. இந்த தீவிர முயற்சியின் பலனாக கிடைத்ததுதான் கொரோனா தொற்று தடுப்பூசி. இது தொற்று பாதிப்புக்கு எதிராக செயல்படும் என்று நிரூபணம் செய்யப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் இதனை சம்பந்தப்பட்ட நாடுகள் உற்பத்தி செய்ய தொடங்கின. மக்கள் அனைவருக்கும் இதனை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார மையமும் அறிவுறுத்தியது.
இந்த தடுப்பூசி வந்த பின்னர் அதன் பலன்கள் கண்முன்னே தெரிய தொடங்கியது. தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னர் மருத்துவமனைகளில் குவிந்து கிடந்த மக்கள், தடுப்பூசி கிடைத்த பின்னர் ஓரளவு நோயெதிர்ப்பு சக்தியை பெற தொடங்கினர். ஆனால் இந்த தடுப்பூசி குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமான உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் வெளியாகின. அதாவது இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் உயிரிழக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான எவ்வித ஆதாரமும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த செய்திகளை பிரபலமான சிலரும் கூட பகிர தொடங்கினர். அதில் முக்கியமானவர்தான் இந்த மைக்கேல் யேடன். கொரோனா தொற்றுக்கு எதிராக சிறப்பான செயல்திறன் கொண்ட தடுப்பூசியை உற்பத்தி செய்த ஃபைசர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மற்றும் துணைத் தலைவர்தான் இந்த மைக்கேல் யேடன். தற்போது இவர் கூறியுள்ள கருத்துதான் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "மனித வளத்தை கன்ட்ரோல் செய்ய 'டீப் ஸ்டேட்' (Deep State) கண்டுபிடித்த ஒரு பயோ-வெப்பன்தான் கொரோனா தடுப்பூசி" என்று கூறியுள்ளார்.

இதில் 'டீப் ஸ்டேட்' என்பது இலுமினாட்டிகள் போல மறைந்து வாழ்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் FBI மற்றும் CIA என உயர் அதிகாரமிக்க அமைப்புளில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான எந்த ஆதாரமும் தற்போது வரை எந்த ஆதாரமும் வெளிளியாகவில்லை. அமெரிக்காவின் சில முக்கிய அரசு அதிகாரிகள் தங்களுக்கும் இந்த டீக் ஸ்டேட்-க்கும் தொடர்பு இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளனர். அந்நாட்டில் இதனை பாதிபேர் நம்புகின்றனர். அதுபோல மீதி பாதிபேர் இது ஒரு கட்டுக்கதை என்று பலர் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில்தான் மைக்கேல் யேடன் டீப் ஸ்டேட்டை குறிப்பிட்டு தடுப்பூசி தொடர்பாக தனது கருத்தை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "உலகில் உள்ள மக்கள் தொகை குறைக்க வேண்டும. அதேபோல மக்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்ற வேண்டும். இதற்காகதான் இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை தடுப்பூசி இறப்பிலிருந்து பாதுகாத்துக்கொண்டிருந்தபோது, இவர் தடுப்பூசியே தேவையில்லை என்று கூறியிருந்தார்.இது அப்போதும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இருப்பினும் இவர் தனது கருத்திலிருந்து பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications