நரகமே பூமிக்கு வரும்.. எச்சரித்த டிரம்ப்! மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்! ஹமாஸ் பதிலடி! முற்றிய மோதல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதல் கட்டமாக 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. 33 இஸ்ரேல் பிணை கைதிகள் இதன் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர். மொத்தமாக 96 பேர் ஹமாஸ் மூலம் இஸ்ரேலில் பிடிக்கப்பட்டனர். இதில் 34 பேர் பலியாகிவிட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் 33 பேர் வரை முதல் கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்.

ஆனால் மீதம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் நரகமே உங்கள் மீது இறங்கும் என்று ஹமாஸுக்கு டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலடி தந்த ஹமாஸ்.. உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அடிபணிய முடியாது. நரகம் பூமிக்கு வந்தால் வரட்டும். உங்கள் மிரட்டலை நாங்கள் ஏற்க மாட்டோம். அதற்கு அடிபணிய மாட்டோம் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

hamas donald trump

அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது இஸ்ரேலில் இருந்து கைப்பற்றப்பட்ட 94 பணயக்கைதிகளை ஹமாஸ் மற்றும் அவர்களின் இணை அமைப்புகள் இன்னும் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நம்புகிறது, அவர்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர். இதில்தான் 33 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

டிரம்ப் எச்சரிக்கை:

ஏற்கனவே மத்திய கிழக்கில் மிகப்பெரிய நரகத்தையே கொண்டு வர நான் தயார்.. இதற்கான காலக்கெடு தொடங்கி உள்ளது. அதற்குள் ஹமாஸ் அமெரிக்காவிற்கு அடிபணிய வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், நேட்டோ பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மத்திய கிழக்கு நாடுகளை நரகமாக மாற்றவும் தயார்.. அங்கே நரகத்தை இறக்கவும் நான் தயார் என்று எச்சரித்து உள்ளார். .

அமெரிக்கா பணயக்கைதிகளை.. நேட்டோவின் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. நான் அதிபராக முன் இது நடக்க வேண்டும். அதற்கு பின் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. நான் அதிபர் ஆன பின் நடவடிக்கை மட்டுமே எடுப்பேன்.. ஹமாஸ் அடிபணிய வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அது நல்லதல்ல.. ஏன் யாருக்குமே அது நல்லதல்ல..

அவ்வளவுதான் நான் சொல்வேன். அவர்களுக்கு ஏற்கனவே போதுமான நேரம் கொடுத்துவிட்டேன். இனியும் நேரம் கொடுக்க உடையும் . எனக்கு இஸ்ரேலில் இருந்து தினமும் கால் வருகிறது. இந்த பிணைக்கைதிகள் விவகாரம் முக்கியமானது. என்னிடம் அவர்களின் குடும்பத்தினர் வந்து கதறுகின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர்.

இனியும் என்னால் அதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. அந்த தாய்மார்களுக்கு அவர்களின் மகன்களை திருப்பி கொடுக்க வேண்டியது என் கடமை. இதற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது. நான் பதவி ஏற்க உள்ள நாளுக்கு முன் ஹமாஸ் இதை செய்ய வேண்டும், என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஏற்கனவே பாலஸ்தீனத்தில் விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் குழு அமெரிக்காவிற்கு எதிராக அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அமெரிக்காவின் மேற்பார்வையில் இஸ்ரேல் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது என்று ஹமாஸ் அறிவித்து உள்ளது.

அதாவது போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம். போர் நிறுத்தும் வாய்ப்பே இல்லை. ஹமாஸ் சிறைபிடித்து உள்ள இஸ்ரேல் படைகளை விடுதலை செய்தால்.. போர் நிறுத்தம் செய்வோம் என அமெரிக்காவின் வாக்குறுதியின் அடிப்படையில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை செய்தது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேல் மீது கண்டிப்பாக போர் தொடுப்போம் என்று ஹமாஸ் தெரிவித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+